Thursday, 6 February 2014

பெற்ற தாயயே கொன்று தின்ற காட்டுமிராண்டி சகோதரர்கள்

மணிலா,
பிலிப்பைன்ஸ் நாட்டின் மிகவும் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் நடந்துள்ளது. அம்பாதுன் என்ற இடத்தில் முசாலா அமில்(51) என்ற பெண்ணை அவரது மகன்கள் தாந்தே, பாரோய், இப்ராகீம் ஆகியோர் கொலை செய்து அவரது உறுப்புகளை தின்றுள்ளனர்.
அவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் அங்கு வந்து பார்த்த போது முசாலா கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்துள்ளது. பெண்ணின் உடல் உறுப்புகளை அவரது மகன்களே தின்ற அவலமும் நடந்துள்ளது என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைந்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
போதை மருத்து உட்கொண்டதால் பித்துபிடித்தது போலான வாலிபர்கள் இவ்வாறு செய்திருக்கலாம் என்று போலீசார் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் மூன்று பேரும் போதை மருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment