இருப்பவரிடம் பறித்து, இல்லாதவரிடம் கொடுப்பது ‘ராபின்ஹூட்‘ வேலை. ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த ஒருவர், அதுபோன்று செய்து போலீசில் மாட்டிக் கொண்டார். அவர் போலீஸ்காரராக பணியாற்றி, கட்டாய ஓய்வு பெற்றவர் ஆவார்.
அவர் ஆப்பிரிக்கா நாட்டில் பணியாற்றியபோது, அங்கு நிலவிய வறுமை மற்றும் பட்டினியை கண்டு மனம் கலங்கினார். கொள்ளை அடித்தாவது, அவர்களுக்கு உதவ வேண்டும் என்று தீர்மானித்தார். ஆஸ்திரியா நாட்டில் ஒரு பாதுகாப்பு நிறுவனம், ஏ.டி.எம். இயந்திரங்களில் பணத்தை வைப்பதற்கு, வேனில் பணத்தை கொண்டு செல்வதை நோட்டமிட்டார். துப்பாக்கி முனையில அப்பணத்தை கொள்ளையடித்து ஆப்பிரிக்க மக்களுக்கு வழங்க திட்டமிட்டார். அதற்காக, அந்த நிறுவனத்தில் முன்பு பணியாற்றி விட்டு விலகிய ஒரு பெண்ணை தனது கைக்குள் போட்டுக் கொண்டார்.
திட்டமிட்டபடி, அந்த வேனை மறித்து கொள்ளையில் ஈடுபட்டார். அதில் இருந்த 30 லட்சம் பவுண்டு (ரூ.24 கோடி) பணத்தையும் கொள்ளையடித்தார். போலீஸ் தீவிர விசாரணையில் முன்னாள் பெண் ஊழியரும் நவீன ராபின்ஹூட்டும் சிக்கினர். அவர்கள் கொள்ளையடித்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment