கரும்பு விவசாயிகளை, மத்தியில் ஆட்சியில் உள்ள, காங்., அரசு, கசக்கி
பிழிந்து விட்டது,'' என்கிறார், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க தலைவர்,
என்.பழனிச்சாமி. "தினமலர்' நாளிதழுக்கு, அவர் அளித்த சிறப்பு பேட்டி:
கரும்பு கட்டுப்பாட்டு சட்டம், 1966ன்படி, கரும்பில் உற்பத்தியாகும்
சர்க்கரையை மட்டும் வைத்தே, கரும்புக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
தற்போது கரும்பில் இருந்து மொலாசஸ், எத்தனால், கழிவிலிருந்து உரம்,
சக்கையிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்தத் துணை பொருட்களில்
கிடைக்கும் லாபத்தில், விவசாயிகளுக்கு பங்கு கொடுக்கப்படுவதில்லை. இதுவரை
இருந்த மத்திய அரசுகள், துணை பொருட்களில் கிடைக்கும் லாபத்தில் பங்கு
கொடுக்கும் வகையில் சட்டத்தை மாற்ற, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கட்டுமானம், 8.5 சதவீதம் உள்ள கரும்புக்கு விலை நிர்ணயித்து, அதற்கு மேல்,
கிடைக்கும் சர்க்கரைக்கு கணக்கிட்டு, விலை கொடுக்கப்பட்டது. மத்திய அரசு,
சர்க்கரை ஆலை உரிமையாளர்களுக்கு சாதகமாக, கரும்பு கட்டுமானத்தை, 9 சதவீதமாக
உயர்த்தியது. தற்போது விலை நிர்ணயம் செய்ய, கட்டுமானத்தை, 9.5 சதவீதமாக
உயர்த்தியது, விவசாயிகளுக்கு நஷ்டமாகும்.
அதிகரித்த உற்பத்தி செலவு : மத்திய அரசு உர மானியத்தை ரத்து செய்து விட்டது. உர விலை தற்போது, 100 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. டீசல் விலையை, மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால், உற்பத்திக்கு அதிகம் செலவழிக்க வேண்டியுள்ளது. எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையில், "உற்பத்தி செலவுடன், அதில், 50 சதவீதம் சேர்த்து, கட்டுபடியான விலை கொடுக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, பரிந்துரை செய்யப்பட்டது; இதுவரையிலும், அந்தப் பரிந்துரையை, மத்திய அரசு அமல்படுத்தவில்லை.
உற்பத்தி செலவை பற்றி கவலைப்படாமல், துணை பொருட்களை கணக்கில் எடுக்காமல், சர்க்கரைக்கு மட்டும், விலை நிர்ணயம் செய்வது மோசடி. சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் கொள்ளையடிக்க வழிவகுக்கிறது.
கமிஷன் அறிக்கை : கடந்த காலங்களில், கரும்புக்கு சட்டப் பூர்வ விலையின்படி, விலை நிர்ணயிக்கப்பட்டது. தற்போது சட்டப்பூர்வ விலையை நீக்கி விட்டு, எப்.ஆர்.பி. (பேர் ரெமுனரேடிவ் பிரைஸ்) என, நிர்ணயம் செய்கிறது. மத்திய அரசை, தனியார் சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் கேட்டதற்கு இணங்க, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரங்கராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, கரும்பு தொழிலை மேம்படுத்துவது சம்பந்தமாக அறிக்கை கொடுக்கும்படி பணிந்தது. அந்தக்குழு, சர்க்கரை ஆலை உரிமையாளர்களுக்கு சாதகமாக அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின்படி, கரும்பு பகுதியை நீக்குவது, விவசாயிகளை அலைக்கழிக்கும்; கரும்பை விற்க முடியாத நிலை ஏற்படும். ஆலையில் உற்பத்தியாகும் சர்க்கரையில், 10 சதவீதம் "லெவி'யாக மத்திய அரசுக்கு வழங்க வேண்டும். இந்த சர்க்கரையைத் தான் அரசு, ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் விற்கிறது. தற்போது "லெவி' சர்க்கரை ரத்து செய்யப்பட்டு விட்டது.
உற்பத்தி சர்க்கரையில், மத்திய அரசு உத்தரவின்படி, மாதம் எவ்வளவு சர்க்கரையை விற்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. உள்நாட்டு தேவையை பொறுத்து, ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற விதியிருந்தது; தற்போது இது, ரத்து செய்யப்பட்டு விட்டது. ரங்கராஜன் கமிட்டி பரிந்துரை, ஆலை உரிமையாளர்களுக்கு சாதகமாக அமைந்ததாக கருத தோன்றுகிறது. அதனால், மத்திய அரசு ஆதரவுடன், தனியார் சர்க்கரை ஆலைகள், மாநில அரசின் பரிந்துரை விலையை கொடுக்க மறுக்கின்றன.

No comments:
Post a Comment