சென்னை, பிப். 18–
சென்னை ஓமாந்தூரார் அரசினர் தோட்டத்தில் தி.மு.க. ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றி தமிழக அரசு 
உத்தரவிட்டது. இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்பாயத்தில் வக்கீல் வீரமணி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் வீரமணி அப்பீல் செய்தார். இந்த அப்பீல் மனு நீதிபதிகள் பால்வசந்த்குமார், தேவதாஸ் ஆகியோர் முன்னிலையில் இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment