வேலூர், பிப்.18–
தூக்கு தண்டனை ரத்து செய்ததை வரவேற்று நளினியின் தாயார் நர்ஸ் பத்மா கூறியதாவது:-
தீர்ப்பு கூறிய நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும், அரசியல் கட்சியினர், மாணவர்கள், போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி.
மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க பாடுபட்ட தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி. அதேபோல் அனைவரையும் விடுவிக்க முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோல் முருகனின் தாயார் சோமணி கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது.
தீர்ப்புகூறிய நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்கள் மற்றும் இதற்காக போராடிய அனைவருக்கும் நன்றி.
மேலும் மரண தண்டனையை ஒழிக்க போராடி உயிர்நீத்த செங்கொடி, முத்துக்குமரன் ஆகியோருக்கு வீர வணக்கம்.
முருகன், நளினியின் மகள் நலன் கருதி அவர்களை விடுதலை செய்யவேண்டும். அதேபோல் அனைவரையும் விடுவிக்க முயற்சிக்க வேண்டும். தீர்ப்பை கேட்டவுடன் எனது மகன் மகிழ்ச்சியுடன் உள்ளார் என்றார்.
No comments:
Post a Comment