இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷரப்(70) தேசதுரோக வழக்கு உள்பட பல வழக்குகளை சந்திக்கிறார். அதில் தேசதுரோக வழக்கில் இதுவரையில் கோர்ட்டில் அவர் ஆஜராகாமல் தவிர்ப்பதுடன் திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதாக ராவல்பிண்டியில் இருக்கும் ராணுவ மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுகிறார்.
இதனால் அந்த வழக்கை விசாரிக்கும் தனிக்கோர்ட்டு அவருக்கு ரூ.25 லட்சம் ஜாமீன் பெறக்கூடிய கைது வாரண்டு உத்தரவை பிறப்பித்தது. அதோடு இந்த வாரண்டை ஒப்படைத்து விட்டு அதன் விவரம் குறித்த அறிக்கையை கோர்ட்டில் 7–ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இஸ்லாமாபாத் போலீசுக்கு உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து போலீசார் ராவல்பிண்டியில் முஷரப் சிகிச்சை பெற்றுவரும் ராணுவ மருத்துவமனைக்கு சென்று வாரண்டை ஒப்படைத்தனர். இந்நிலையில் சிறப்பு கோர்ட்டு பிடிவாராணடு பிறப்பித்தது தொடர்பாக விசாரணை நடத்த கோரி முஷரப் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளார்.
No comments:
Post a Comment