சட்டசபையில் இன்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெறும் ஓட்டுனர் உரிமம் வழங்கும் தேர்வை கண்காணிப்பு கேமரா மூலம் கவனித்து உரிமம் வழங்க அரசு ஆவண செய்யுமா? என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ் கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அளித்த பதில் வருமாறு:– திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், திண்டுக்கல், திருச்சி, கோவை உள்பட 14 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுனர் உரிமம் பெறுவோர்களுக்கு தேர்வு நடத்துவதை கேமரா மூலம் கண்காணித்து அதை கம்ப்யூட்டரில் பதிவு செய்து நவீன தொழில்நுட்பத்தின்படி அவர்களுக்கு உரிமம் வழங்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்கு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வில் பங்கேற்பவர்களுக்கு அவர்கள் எப்படி ஓட்டினார்கள் என்பதை சி.டி. ஆக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்–அமைச்சர் எடுத்த பல்வேறு நடவடிக்கை காரணமாக தமிழ்நாட்டில் விபத்து விகிதம் குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment