ஜெர்மனி நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, அழகான முகங்களை கொண்டவர்களை விட அழகற்ற முகங்களை கொண்டவர்களே அதிகளவில் நினைவில் இருப்பார்கள் என்று தெரிவிக்கின்றது. ஜெர்மனி நாட்டின் ஜெனா பல்கலை கழகத்தை சேர்ந்த மனநல ஆய்வாளர்கள் ஹோல்ஜர் வீஸ், கரோலின் ஆல்ட்மேன் மற்றும் ஸ்டெபான் ஸ்க்வெய்ன்பெர்ஜர் ஆகியோர் தலைமையில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
அந்த ஆய்வில், கவரும் தன்மை குறைந்த அழகற்ற முகங்களை கொண்டவர்களின் புகைப்படங்கள் எளிதில் அடையாளம் காணப்பட்டன. அதேவேளையில் வசீகர தன்மை கொண்ட முகங்களை அடையாளம் காண்பதில் சற்று கடினமாக இருந்துள்ளது. இது பெரும்பாலான ஆய்வுக்கு உட்பட்ட நபர்களின் முடிவில் இருந்து தெரிய வந்துள்ளது.
எனினும், ஏஞ்சலினா ஜோலீ போன்ற தனித்தன்மை வாய்ந்த முக அமைப்பை கொண்டவர்களை மக்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்கின்றனர். ஆய்வில் கலந்து கொண்டவர்களில் பாதி பேர் வசீகர முகத்துடனும், மீதமுள்ள பாதி பேர் வசீகரம் குறைந்த முகத்துடனும் இருந்தனர். எனினும், அனைவரும் தாங்கள் தனித்துவமான தோற்றத்தை கொண்டவர்கள் என்று கருதி கொண்டனர்.
ஆய்வில், அழகான முகத்தை கொண்டவர்களை நினைவில் வைப்பதற்கு உணர்வு ரீதியிலான பாதிப்பு காரணமாக கடினமாக உள்ளது என தெரிய வந்துள்ளது. இதற்கு ஆதாரமாக விஞ்ஞானிகள் தங்களது ஆய்வில் பயன்படுத்திய ஈ.ஈ.ஜி. பதிவுகள் அதனை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதில், மூளையின் மின் செயல்பாடுகள் அதற்கேற்ப செயல்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வில், அழகான முகத்தை கொண்டவர்கள் தங்கள் பணியில் சிறந்து விளங்குகின்றனர். அவர்களது இளமையான தோற்றம் மங்க ஆரம்பித்தாலும் அவர்கள் வேலையில் சிறந்து விளங்குவதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கின்றது. அழகானவர்கள் குறித்த ஆய்வில், அவர்கள் மற்றவர்களை விட அதிகமான கவுரவமிக்க பணிகளில் இருக்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது.
எஸ்செக்ஸ் பல்கலை கழகத்தின் சமூக மற்றும் பொருளாதார ஆய்வு அமைப்பின் ஆராய்ச்சியாளரான கண்டி நைஸ் கூறும்போது, நல்ல தோற்றம் கொண்டவர்கள் தங்கள் அழகினால் ஆதாயம் பெறுகின்றனர். முக வசீகரம் ஆனது ஒருவரது தொழிலில் அவரது கவுரவம் குறித்த தீர்மானத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
சுமார் 8 ஆயிரம் பேரிடம் அவர்களது தொழில் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தோற்ற பொலிவு கொண்டவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் அதிக அளவில் வெற்றியாளராகவே திகழ்ந்துள்ளனர். அவர்களின் பணி குறித்த வரலாற்றில், அழகானது நிலைத்து இருந்துள்ளது. மேலும், அழகானவர்கள் வயதானாலும் சிறப்பாகவே பணிபுரிகின்றனர் என தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment