Thursday, 6 February 2014

பிரதமருடன் தி.மு.க. எம்.பி.க்கள் சந்திப்பு: தமிழக மீனவர்களை மீட்க கோரி மனு

புதுடெல்லி, பிப். 6–
கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தினம், தினம் விரட்டியடிக்கிறார்கள்.
அதோடு தமிழக மீனவர்களை கடத்திச் சென்று சிறை வைத்துள்ளனர்.
தமிழக மீனவர்களின் இந்த பிரச்சினை நேற்றும் இன்றும் பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண கோரி, தி.மு.க. எம். பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே இன்று மதியம் பிரதமர் மன்மோகன் சிங்கை, தி.மு.க. எம்.பி.க்கள் சந்தித்துப் பேசினார்கள். அப்போது அவர்கள் பிரதமரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:–
கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் தொடர்ந்து தாக்குகிறார்கள். தமிழக மீனவர்கள் பலர் கடத்தி செல்லப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அந்த மீனவர்களை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க இரு நாட்டைச் சேர்ந்தவர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும்.
அந்த குழுவில் இரு நாட்டு மீனவ பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும். அதன் மூலம் இரு நாட்டு மீனவர்களும் பயன் அடையும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு தி.மு.க. எம்.பி.க் கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment