Thursday, 7 August 2025

ஜூலை 27 அன்று லயோலா கல்லூரியில் நடைபெற்ற "பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதி மாநாடு"






ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 27, 2025 அன்று சென்னை லயோலா கல்லூரியில், "பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதி மாநாடு" பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு பெண்கள் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், மற்றும் சமூக நீதி இயக்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றது ஒரு தனிச்சிறப்பு.



இந்த மாநாட்டை, PUCL தேசிய துணைத் தலைவர் பேராசிரியர் சரஸ்வதி மற்றும்  பெண்ணுரிமை இயக்கம்   பேராசிரியர் R. கீதா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.வழக்கறிஞர் அஜிதா, லயோலா கல்லூரியின் தாளாளர் அருட்திரு லியோனார்ட் சாம்சன் மற்றும் கல்லூரி முதல்வர் அருட்திரு தாமஸ் அமிர்தம் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் ஏ.எஸ். குமாரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.  பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து ஆழமான உரையாற்றினார்.அவர் தனது உரையில், தமிழ்நாடு மகளிர் ஆணையத்திற்கு வரும் புகார்களில் 80% தீர்க்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். மேலும், பெண்களுக்கு விழிப்புணர்வு குறைவாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்திற்கு செல்வதுடன், மகளிர் ஆணையத்திலும் புகார் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.



மூத்த வழக்கறிஞர் காயத்ரி சிங், பதர் சையீது. ரூத் மனோரமா, கேப்ரீயேல், சீமா குல்கர்னி, ப.பா.மோகன், பாக்கயலஷ்மி, மீரா சங்கமித்ரா,எஸ்.டி.ஸ்டெகனா ஜென்ஸி, ஆகியோரும்  சிறப்பு அழைப்பாளர்களாகவும்  கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை, அனுபவங்களை பதிவு செய்தனர் .

இந்த மாநாட்டில்  லயோலா கல்லூரியின் புறசேவை துறை (Department of Outreach Service)  அரங்க நிகழ்ச்சியில்  ஏற்பாடு மற்றும் நிகழ்ச்சியில்   பங்கு  பெற்றிருந்தது. பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதி மாநாடு: சென்னையில் அமோக வரவேற்பு! பெற்றது .





மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள்:-

 


மேலும்,  மநிதி செல்வி , காந்திமதி ,  ஜாக்குளின்,  மேரிலில்லி,  மருத்துவர் சாந்தி, தோழர்  பாலா ,'நீதியின் தீர்ப்பு' இதழ் ஆசிரியர் (pucl )கிருஷ்ணவேணி,ஹைருண்ணிநிஷா,சோபிதா,அண்ணக்கிளி, ஞானமணி,  திவ்யா, கலைவாணி,நிர்மலா ,கீதா நாராயணன் ,பாண்டிமா தேவி    மற்றும் பலர் பல  அமைப்பின் தோழர்கள்  முன்னின்று  நிகழ்ச்சியை  சிறப்பாக ஒருங்கிணைத்தவர்கள். 


பரந்த அளவிலான பங்கேற்பு:-

இந்த மாநாட்டின் தனித்துவமான அம்சம், சமூகத்தின் பல்வேறு தளங்களில் இருந்து வந்த பிரதிநிதிகளின் பரந்த அளவிலான பங்கேற்புதான். வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கம், கட்டிட வேலைத் தொழிலாளர் சங்கம், சிறுபான்மையினர் பெண்கள் கூட்டமைப்பு, தலித் பெண்கள் கூட்டமைப்பு, மீனவப் பெண்கள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் தங்கள் குரல்களைப் பதிவு செய்தனர். இவர்களுடன், லயோலா கல்லூரி மாணவர்களும் திரளாகக் கலந்துகொண்டு, விவாதங்களில் ஆர்வம் காட்டினர்.

ஊடகவியலாளர்    TSS  மணி  ,  அருள் , திவிக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் | திவிகசென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி | திவிக வடசென்னை மாவட்ட அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி , சாதி ஒழிப்பு  அமைப்பின் பொதுச்செயலாளர்  ரமணி , மக்கள் அதிகாரம்  மாநில பொருளாளர்  அமிர்தா, ஜீவசுந்தரி  ,சுதா காந்தி  ,  k  பாலகிருஷ்ணன் ,பேரா . சங்கரலிங்கம் pucl  ,   புளியந்தோப்பு மோகன்pucl   ,  TNCPDR  கோபால் , ஷகிலா , மாரியப்பன் pucl , ஆ . பாலசுப்ரமணிpucl    உள்ளிட்டோர் ,மேலும்  பல அமைப்பின்  தோழர்களும்   பங்கேற்றனர். 


மாநாட்டின் முக்கிய நோக்கங்கள்:-

இந்த மாநாட்டின் முதன்மை நோக்கம், சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறை, இணையக் குற்றங்கள், பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும். மேலும், சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவது, பெண்களுக்கு உள்ள சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து தெளிவுபடுத்துவது, சமூக விவாதத்தைத் தூண்டுவது, மற்றும் இளம் தலைமுறையினரை சமூகப் பொறுப்புள்ளவர்களாக மாற்றுவது ஆகியவையும் மாநாட்டின் முக்கிய நோக்கங்களாக அமைந்தன.

சமூக மாற்றத்திற்கான ஒரு வலுவான அடி:-

இந்த மாநாடு, தமிழ்நாடு அளவில் பல்வேறு தரப்புப் பெண்களின் குரல்களை ஒன்றிணைத்து, அவர்களின் பிரச்சனைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் ஒரு பொதுவான தளத்தை வழங்கியது. இது பெண்களின் பாதுகாப்பு மற்றும் பாலின நீதிக்கான போராட்டம் தனிப்பட்ட முயற்சியல்ல, மாறாக ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டு முயற்சி என்பதை அழுத்தமாக வலியுறுத்தியது.  கிட்டத்தட்ட 100 க்கும்  மேற்பட்ட அமைப்புகள் கலந்துகொண்டன . 87 அமைப்புகள்  பதிவாகியது. கடைசிநேரத்தில் பல அமைப்புகள் ஆர்வமுடன் கலந்துகொண்டன . 1500 க்கும் மேற்பட்ட தோழமைகள் அனைத்து பாலினமும்  கலந்துக்கொண்டது . இந்த மாநாடு, தமிழ்நாட்டில் பாலின நீதியை நிலைநாட்டுவதற்கான ஒரு வலுவான சமூக மாற்றத்திற்கு வித்திட்டுள்ளது.

 இதில் பெண்களின் பிரச்சனைக்கான ,(பாலியல் வன்முறை சார்ந்த எந்தவயதினருக்கும்) தீர்வுக்கான சட்ட ஆய்வு   தீர்மான கையேடு தயாரிக்கபட்டு வெளியிடப்பட்டது . 


 

காலை -மாலை டீ ,கேக் - சுண்டல் , காலை சிற்றுண்டி ,மதிய உணவு ,மருத்துவர்கள் ,ஆம்புலன்ஸ், மாற்றுத்திறனாளி உதவி  ,   புத்தகம்  மற்றும் பெண்கள் கைவினை பொருட்கள் உட்பட  விற்பனை செய்ய  என  அனைத்து  வகையான  ஏற்பாடுகளும் செய்யப்பட்டன .

No comments:

Post a Comment