சென்னை கோட்டூர்புரத்தில் தமிழக அரசு சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இதழியல் கல்வி நிறுவனத்தின் தொடக்க விழா 25.8.2025 அ ன்று நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, இதழியல் கல்வி நிறுவனத்தை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில் தமிழ்நாடு அரசு சார்பில் 'சென்னை இதழியல் கல்வி நிறுவனம்' அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.7.75 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த இளைய தலைமுறையினருக்கு குறைந்த கட்டணத்தில் ஓராண்டு இதழியல் முதுநிலை பட்டய படிப்பு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழியிலும் இங்கு பயிற்றுவிக்கப்படும். பிரிண்ட், டெலிவிஷன், ரேடியோ மற்றும் இணைய ஊடகங்களில் பணிபுரிவதற்கான திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில் இந்நிறுவனத்தின் பாடத்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாறி வரும் டிஜிட்டல் யுகத்தில், அடுத்த தலைமுறையினர் தங்களை தயார் செய்துகொள்ள உதவும் வகையில் சர்வதேச கல்வி நிறுவனங்களுடன் இந்நிறுவனம் ஒப்பந்தம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment