Tuesday, 26 August 2025

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை, 5 ஈழத் தமிழ் பெண்கள் உள்ளிட்ட ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டியும் ஆர்ப்பாட்டம்!.

   
 79வது ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும்  இந்தியாவில் 30 ஆண்டுகளாக சுதந்திரமற்று வாழும் ஈழத் தமிழர்கள். என்ற கோரிக்கையோடு , ஈழ அகதிகள் பாதுகாப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர்    பா .புகழேந்தி  தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அருகில்  20 .8.2025 அன்று  புதன் மாலை  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    இந்த கோரிக்கை ஆர்பாட்டத்தில் , தமிழ்நேயன் ,பொதுச்செயலாளர் தமிழ் தேச மக்கள் கட்சி, தடா ரஹீம் தலைவர் ,இந்திய தேசிய லீக் கட்சி, புலவர் ரத்தினவேலனார் தலைவர் தமிழ் உரிமை கூட்டமைப்பு, 


    கா. சக்திவேல் தலைவர் ,தமிழ்நாடு முற்போக்கு மக்கள் கட்சி, தமிழினியன் துணை தலைவர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், 

    தோ. மா .ஜான்சன். தமிழ் வழக்கறிஞர் பேரவை உயர்நீதிமன்றம், சென்னை, செந்தமிழ் குமரன் தலைவர் ,தமிழ் தேசிய விடுதலைக் கட்சி,  சி. சங்கர் வழக்கறிஞர் பிரிவு, மாநில செயலாளர் நாம் தமிழர் கட்சி, G.G.சிவா தலைவர், தேசிய முற்போக்கு கழகம், எழிலரசன் , மக்கள் புரட்சி கழகம் மாநில செயலாளர், கார்ட்டூன்ஸ் டு பாலா ஆகியோர் அரசுக்கு கோரிக்கை வைத்து உரையாற்றினர். 


    தொடர்ந்து     தமிழகத்தில் உள்ள  இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டியும், திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 5 ஈழத் தமிழ் பெண்கள் உள்ளிட்ட ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டியும் கோரிக்கை முழுக்கத்துடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

    ஐக்கிய நாடுகள் அகதிகள் தொடர்பான உடன்படிக்கையில் இந்திய அரசு கையெழுத்திடாத காரணத்தால் ஐக்கிய நாடுகள் அவையும் ஈழத் தமிழர்களை தொடர்ந்து அகதிகளாக கூட அங்கீகரிக்காமல் “இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக கூடியவர்கள்” என்று இந்திய அரசு அறிவித்துள்ளதற்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இன்னொரு பக்கம்  பல ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு இங்கிலாந்து கனடா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சென்றவர்கள் அந்தந்த நாடுகளில் அகதியாக பதிவு செய்யப்பட்டு ,சில காலங்களுக்கு பின் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் மருத்துவராகவோ, பொறியாளராகவோ, வழக்கறிஞராகவோ ஆக முடிகிறது. மேலும்  அரசு வேலைகளையும் பணி செய்ய முடிகிறது. சுதந்திரமாக தொழில் செய்ய முடிகிறது. சிலர் பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் கூட அந்த நாடுகளில் ஆகிவிடும் சூழல்  வருகிறது. ஆனால் தமிழகத்தில் 20 ஆண்டுகளாக 30 ஆண்டுகளாக 40 ஆண்டுகளாக இருக்கும் ஈழத் தமிழர்கள் சட்ட விரோத குடியேறிகள் என அறிவிக்கப்பட்டு எந்தவித உரிமையுமற்றவர்களாக இந்திய அரசாலும் ஆளும் தமிழக அரசாளும்  தொடர்ந்து ஒடுக்கு முறைக்கு ஆளாகி வருகிறார்கள். அவர்கள் இந்தியாவில் இருந்து வேறு எந்த நாட்டிற்கும் செல்ல முடியாத வகை இந்திய அரசும் தமிழக அரசும் அவர்களை தடுத்து வைத்துள்ளது. மேலும் இவர்கள்  தனக்கு சொந்தமாக  இரு சக்கர வாகணம்  உள்ளிட்ட அசையும் சொத்துக்களோ ,அசையா சொத்துக்களோ வாங்க  முடியவில்லை , தனது நாட்டுக்கும் செல்லமுடியவில்லை என்று  தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ஈழ அகதிகள் பாதுகாப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும்   வழக்கறிஞ்சறுமான . பா .புகழேந்தி.  

    தமிழகத்தில் உள்ள 110 முகாம்கள் மற்றும் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து அவர்கள் துயரத்தை கேளுங்கள் அவர்கள் துயரங்களை துடைக்கும் முயற்சி செய்யுங்கள் உங்களின் வருகைக்காக அவர்கள் ஆவலோடு முகாம்களில் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கோரிக்கை வைத்துள்ளார் ஈழ அகதிகள் பாதுகாப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி .

    தமிழக அரசு இதனை செவிசாய்க்குமா?.என்பதே நமது  கேள்வி

No comments:

Post a Comment