'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் பிரசாரம் மேற்கொண்டிருக்கும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நேற்று திருச்சி, திருவெறும்பூரில் பேசியதாவது: : ' 'அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்கும் போது, ஸ்டாலின் சட்டை, வேஷ்டி இரண்டையும் கிழித்துக் கொண்டு செல்வார்,'' திருச்சியில் பழனிசாமி பேசினார். மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் பிரசாரம் மேற்கொண்டிருக்கும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நேற்று திருச்சி, திருவெறும்பூரில் பேசியதாவது:
தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்று 51 மாதங்களில், மக்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. கவர்ச்சிகரமாக பேசி, நிறைவேற்ற முடியாத அறிவிப்புகளை வெளியிட்டு ஓட்டு வாங்கியவர்கள் தி.மு.க.,வினர். தமிழகத்தில் விலைவாசி உயர்ந்துள்ளது. மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும்போது, விலைவாசி உயர்வை குறைக்க நடவடிக்கை எடுப்போம்.
அமைச்சர் நேரு, எம்.ஜி.ஆருக்கு பெண்களிடம் இருந்த செல்வாக்கை போல், ஸ்டாலினுக்கு இருப்பதாக தெரிவித்தார். எம்.ஜி.ஆருக்கு என்று தனி அடையாளம் உள்ளது. அவருக்கு இணையாக யாரும் இல்லை. அவருக்கு இணையாக வைத்து, யாரையும் பேசக்கூடாது.
சட்டசபையில், அ.தி.மு.க., அழுத்தம் கொடுத்ததால் தான், மகளிர் உரிமை தொகை திட்டத்தை தி.மு.க., அரசு கொண்டு வந்தது. ஓட்டுக்களை வாங்கும் வரை அழகாகவும், கவர்ச்சிகரமாகவும் தி.மு.க.,வினர் பேசுவர். ஆட்சிக்கு வந்து விட்டால், மக்களை மறந்து விடுவர்.
தமிழக டி.ஜி.பி., ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன், புதிய டி.ஜி.பி., பட்டியலை அனுப்பி இருக்க வேண்டும்.
புதிதாக நியமனம் செய்யப்பட வேண்டிய டி.ஜி.பி.,க்களின் பட்டியலை இதுவரை, தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பவில்லை. இதில், ஏதோ ஒரு உள்நோக்கமும், கோளாறும் இருக்கிறது. இது குறித்து, தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
கருணாநிதி குடும்பத்திடம் அடிமை சாசனம் எழுதிய கொடுத்தவர்கள் தி.மு.க., அமைச்சர்கள்.
தி.மு.க.,வினருக்கு லாபம் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் விலை உயர்த்தி விடுகின்றனர். விலை உயர்வு காரணமாக, அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க., ஆட்சியில், சட்டசபையில் ரகளை செய்து, சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வந்த ஸ்டாலின், அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்கும் போது சட்டை, வேஷ்டி இரண்டையும் கிழித்துக் கொண்டு செல்வார். அது தான் நடக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment