Thursday, 27 February 2014

சிறுசேரி கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி சிக்கினான் : விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வந்தனர் போலீசார்

சென்னை: ஐ.டி., பெண் பணியாளர் கொல்லப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி கோல்கட்டாவில் சிக்கினான். சி.பி.சி.ஐ.டி., போலீசார் அவனை, நேற்று இரவு விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு
வந்தனர்.சேலம் ஆத்தூரைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவரது மகள் உமா மகேஸ்வரி, 23. சிறுசேரி, "சிப்காட்' வளாகத்தில் உள்ள டி.சி.எஸ்., நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த, ??ம் தேதி இரவு மர்ம நபர்கள், முட்புதருக்குள் தூக்கிச் சென்று அவரை பாலியல் சித்ரவதை செய்து கொன்றனர்.
வழக்கை விசாரித்த, சி.பி.சி.ஐ.டி., போலீசார், மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தைச் சேர்ந்த
உத்தம் மண்டல், 24, ராம் மண்டல், 21, ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியான உஜ்ஜல் மண்டல் என்பவனை, சி.பி.சி.ஐ.டி., போலீசார், நேற்று கோல்கட்டாவில் கைது செய்தனர்.

கொடூர தாக்குதல் : இந்த கைது நடவடிக்கை குறித்து போலீசார் கூறியதாவது: ஐ.டி., பெண் பணியாளர் உமா மகேஸ்வரி, கடந்த 13ம் தேதி, இரவு 10:30 மணிக்கு பணி முடித்து, பிரதான சாலையில் பேருந்து பிடிக்க நடந்து சென்றபோது, ஏற்கனவே அவரால் செருப்பால் அடிக்கப்பட்ட, உஜ்ஜல் மண்டல், அவரது உறவினர் உத்தம் மண்டல், ராம் மண்டல் ஆகியோர் மதுபோதையில் எதிரே வந்தனர். முன்விரோதத்தால் ஆத்திரத்தில் இருந்த, உஜ்ஜல் மண்டல், உமா மகேஸ்வரியின் வாயை பொத்த, உத்தம் மண்டல், அவரை குண்டுக்கட்டாக, அருகில் உள்ள முட்புதருக்குள் தூக்கிச் சென்றார். அதற்கு ராம் மண்டல் உதவி செய்தார். உஜ்ஜல் மண்டல், கொடூரமான முறையில், உமா மகேஸ்வரியை பாலியல் சித்ரவதை செய்தார். மற்றவர்களும் அவரது
கற்பை சூறையாட முயன்றனர். உஜ்ஜல் மண்டலின் கையை, உமா மகேஸ்வரி கடித்ததால், ஆத்திரமடைந்த அவரும், உத்தம் மண்டலும், அவரது கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்தி கொன்றனர்.

தப்பி ஓட்டம் : அதையடுத்து, சென்னையில் இருந்து தப்பிச் செல்ல குற்றவாளிகளுக்கு பணம் தேவைப்பட்டதால், உமா மகேஸ்வரியின் கிரெடிட் கார்டு அட்டை மூலம் பணம் எடுக்க முயன்றனர். அது தோல்வியில் முடிந்ததால், சிறுசேரி, கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நண்பர் அறைகளில் பதுங்கினர்.
கொலை நடந்து ஒன்பது நாட்கள் ஆன போதிலும், போலீசார் கண்டுகொள்ளாததால், அங்கேயே இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த, 22ம் தேதி போலீசார் தேடுதல் வேட்டையை துவக்கியதாக தகவல் அறிந்ததும், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் உஜ்ஜல், கோல்கட்டாவிற்கு தப்பி சென்றான். பயண அட்டவணையின்படி, அந்த ரயில் நேற்று அதிகாலை கோல்கட்டா ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். இந்த தகவலை, குற்றவாளிகளுடன் வேலை செய்து வந்த வாலிபர் ஒருவர் போலீசாரிடம் தெரிவித்தார்.
அந்த வாலிபரை அழைத்துக் கொண்டு விமானம் மூலம் நேற்று முன்தினம் கோல்கட்டாவிற்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் விரைந்தனர். அந்த மாநில போலீசார் உதவியுடன், கரக்பூர் ரயில் நிலைய சந்திப்பில் ரயிலை நிறுத்தி, உஜ்ஜல் மண்டலை கைது செய்தனர்.பின் நேற்று காலை, கோல்கட்டா கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு, நேற்று இரவு விமானம் மூலம் அங்கிருந்து அவர்களை சென்னைக்கு கொண்டு வந்தனர்.இவ்வாறு போலீசார்
தெரிவித்தனர்.

கத்தி, தோடுகள் பறிமுதல் : கைது செய்யப்பட்டுள்ள, உஜ்ஜல் மண்டலிடமிருந்து, உமா மகேஸ்வரியை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி மற்றும் அவர் காதுகளில் அணிந்திருந்த தோடுகளை போலீசார்
கைப்பற்றினர்.சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உஜ்ஜல் மண்டல் கைது செய்யப்பட்டதை மட்டும், அதிகார பூர்வமாக அறிவித்துள்ளனர்.இருவரையும் இன்று, செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணை காவலில் எடுக்க உள்ளனர்.இந்த கொலை வழக்கில், இந்திரஜித் மண்டல் என்பவன், ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவனை கைது செய்துள்ள போதிலும், கொலை நடந்த இடத்தில் காவலுக்கு இருந்ததாக அவன் தெரிவித்ததால், அவனை முக்கிய சாட்சியாக மாற்றுவது குறித்து, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகின்றனர்.

ஏழு நாள் போலீஸ் காவல் : உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைதான, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த உத்தம் மண்டல், 24, ராம் மண்டல், 21, இருவரையும் போலீசார் நேற்று செங்கல்பட்டு முதலாவது
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை, மார்ச் 12ம் தேதிவரை, நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி அங்காள ஈஸ்வரி உத்தரவிட்டார். இந்த நிலையில், அவர்களை, சி.பி.சி.ஐ.டி., போலீசார், 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, டி.எஸ்.பி., வீரமணி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரணை செய்த நீதிபதி,
அவர்களை, ஏழு நாள் சி.பி.சி.ஐ.டி., போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
Click Here

சிறுமியை உயிருடன் எரிக்க முயற்சி : கர்நாடகாவில் போலி சாமியார் கைது

கர்நாடக மாநிலத்தில், 7 வயது சிறுமியை, உயிருடன் எரிக்க முயற்சித்த, போலி சாமியார் கைது செய்யப்பட்டார். பெல்காம் மாவட்டம், அப்பய்யா மடத்தை சேர்ந்த சாமியார், அப்பய்யா சாமி. இவர், அப்பகுதியை சேர்ந்த, சென்னப்பா கஸ்தூரி தம்பதியின், 7 வயது மகள், நிஜலிங்கம்மா தேவி. 'குடும்பத்தில் வறுமை போக வேண்டுமானால், சிறுமியை தன்னுடன், 21 நாள் பூஜைக்கு அனுப்பி வையுங்கள்' என, அந்த தம்பதியிடம், சாமியார் அப்பய்யா கூறி, பெற்றோர் சம்மதத்துடன் அழைத்து சென்றுள்ளார்.
அதன்படி, மடத்தின் கீழ்பகுதியிலுள்ள, குகை போன்ற இடத்தில், சிறுமியை வைத்து பூஜை செய்துள்ளார். இவ்வாறு, 21 நாள் பூஜை செய்து, சிவராத்திரி அன்று பூஜையை முடித்தால், வளங்கள் வந்து சேரும் என கூறி, அதன்படி செய்துள்ளார். இந்நிலையில், திடீரென, அந்த சிறுமியை படுக்க வைத்து, விறகு கட்டைகளை அடுக்கி, எரிக்க முயன்றுள்ளார். அதை பார்த்தவர்கள், போலீசுக்கு தகவல் தெரிவிக்கவே, போலீசார் வந்து, அந்த சிறுமியை மீட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி நிஜலிங்கம்மா தேவி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த மடத்திலிருந்த, மேலும், ஐந்து குழந்தைகள் மீட்கப்பட்டன.
Photo Galleryஆலங்குப்பம், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மயான கொள்ளை விழாவை முன்னிட்டு விரதம் மேற்கொண்டவர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம் நடந்தது
Photo Galleryமுத்தியால் பேட்டை சின்னாத்தா அரசு மேனிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளை வாழ்த்தி வழியனுப்பும் சற்குரு ஓட்டல் மேலாண் இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்

மத்திய அமைச்சர் ரமேஷ் ஆந்திராவில் முற்றுகை

திருப்பதி: திருப்பதி அருகில் உள்ள ரேணிகுண்டா விமான நிலையத்தில், மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ், ஜெகன் மோகன் ரெட்டியின், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியினரால் முற்றுகையிடப்பட்டார்.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க, மத்திய நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ், நேற்று விமானம் மூலம், ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்திருப்பதை அறிந்து, அங்கு திரண்ட, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர், அவரை முற்றுகையிட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பின், போலீசார் அவரை மீட்டு, பாதுகாப்பாக, திருப்பதி அழைத்துச் சென்றனர்.தெலுங்கானா மாநிலம் உருவாக்க அமைக்கப்பட்ட, அமைச்சர்கள் குழுவில் ஜெய்ராம் ரமேஷும் இடம்பெற்றுள்ளதால், தெலுங்கானா மாநில எதிர்ப்பு நிலைப்பாட்டை கொண்டுள்ள, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியினர் நேற்று அவரை முற்றுகையிட்டு, எதிர்ப்பை பதிவு செய்தன

ராஜினாமா! - கடற்படை தளபதி ஜோஷி பதவி விலகினார் : விபத்தில் நீர்மூழ்கி கப்பல் சிக்கியதன் எதிரொலி

மும்பை: "ஐ.என்.எஸ்., சிந்துரத்னா' நீர்மூழ்கி கப்பலில், நேற்று காலை, திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், இரண்டு அதிகாரிகள் உட்பட, ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று, கடற்படை தளபதி, ஜோஷி நேற்று பதவி விலகினார்.

வெடித்து சிதறியது : மேற்கு கடற்படை பிரிவை சேர்ந்த, ஐ.என்.எஸ்., சிந்துரத்னா நீர்மூழ்கி கப்பல், சில ஆண்டுகளுக்கு முன், ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்டது. அதில், சில மாற்றங்கள் செய்யப்பட்டு, நம் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. மும்பை கடலில் இருந்து, 70 கி.மீ.,யில், ஆழ்கடலில் நிறுத்தப்பட்டிருந்த சிந்துரத்னாவில், அதிகாரிகள், ஊழியர்கள் என, 70 பேர் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென, பேட்டரி ஒன்று, பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அதிலிருந்து, ஏராளமான புகை கிளம்பி, நீர்மூழ்கியின் உள் அறைகளை நிரப்பியது. பேட்டரி வெடித்த அறையில், பணியில் இருந்த, இரண்டு அதிகாரிகள் உட்பட, ஏழு பேர், அதிக புகையை சுவாசித்து, மயங்கி விழுந்தனர்.

மருத்துவமனையில் அனுமதி : உடனடியாக, மீட்பு படகுகள் வரவழைக்கப்பட்டு, நீரின் மேல் மட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட நீர்மூழ்கியிலிருந்து, காயமடைந்த வீரர்கள், படகுகளில் ஏற்றப்பட்டு, மும்பை கடற்படை தளத்தில் உள்ள, "ஐ.என்.எஸ்., அஷ்வினி' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பேட்டரியில் ஏற்பட்ட கசிவே, புகை அதிக அளவில் வெளியேற காரணம் என, முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக, கடற்படை கப்பல்கள், அதிக அளவில் விபத்தில் சிக்குவதால் அதிருப்தியில் இருந்த, கடற்படை தளபதி, டி.கே.ஜோஷி, நேற்று, சிந்துரத்னா விபத்தில் சிக்கியதை அறிந்ததும், அதற்கு தார்மீக பொறுப்பேற்று, தன் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார்.
ராஜினாமா கடிதத்தை எழுதி, அதை, ராணுவ அமைச்சர், அந்தோணிக்கு அனுப்பி வைத்தார். அதை ஏற்றுக் கொண்ட அந்தோணி, தற்காலிக தளபதியாக, துணை தளபதி, ராபின் தோவாவை நியமித்தார். புதிய தளபதி நியமிக்கப்படும் வரை அவர், இப்பொறுப்பில் தொடர்வார் என, ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகரிக்கும் விபத்துகள்
2013 - "ஐ.என்.எஸ்., சிந்து ரக் ஷக்' நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கி, 18 வீரர்கள் பலி.
2014, ஜனவரி - "ஐ.என்.எஸ்., சிந்து கோஷ்' திடீரென தரை தட்டி நின்றது.
ஐ.என்.எஸ்., ஐராவத்' போர்க்கலம், திடீரென கடலில் மூழ்கியது.
"ஐ.என்.எஸ்., பெட்வா' மர்ம பொருள் மீது மோதி உடைந்தது.
"ஐ.என்.எஸ்., கொங்கன்' விசாகப்பட்டினம் கடலில் தீப்பிடித்து எரிந்தது.
ஓராண்டிற்குள், கடற்படையின் பல தரப்பட்ட கப்பல்களும், பயங்கர விபத்தில் சிக்கியுள்ளதால், கடற்படையின் மேற்கு பிரிவு, கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.


ஆறு மாதத்தில் அடுத்த விபத்து

2005 டிச.,: மும்பை துறைமுகத்தில் பயிற்சி முடித்து திரும்பி வந்து கொண்டிருந்த ஐ.என்.எஸ் திரிசூல் போர்க்கப்பல், அம்புஜா லட்சுமி என்ற வணிக கப்பலுடன் மோதியது. துறைமுகத்தில் இருந்த ரேடார் கருவிகளாலும், அம்புஜா லட்சுமி கப்பலில் இருந்த ரேடார் கருவிகளாலும், ஐ.என்.எஸ் திரிசூல் கப்பல் மோதுவதை தடுக்க இயலவில்லை
.
2006 ஏப்., : கோவா கடற்கரையில் இருந்து 20 நாட்டிகல் மைல் தூரத்தில், கடல் பகுதியில், ஐ.என்.எஸ். பிரஹார் கப்பலும், எம்.வி.ராஜிவ் காந்தி கப்பலும் மோதியது. ஐ.என்.எஸ்.பிரஹார் கப்பல் இரவு 9.45 மணிக்கு கோவாவில் இருந்து மும்பை திரும்பிய போது, இவ்விபத்து நடந்தது.
2008 ஜன.,: வடக்கு மும்பையில் ஐ.என்.எஸ். சிந்துகோஷ் என்ற நீர்மூழ்கி கப்பல், எம்.வி. லீட்ஸ் கேஸ்ட்டில் என்ற வெளிநாட்டு கப்பலுடன் மோதியது. போரில் பயன்படுத்தப்படும் இந்த நீர்மூழ்கி கப்பல் விபத்துக்குள்ளானது இதன் தரத்தின் மீது கேள்வி எழுப்பியது.
2010 பிப்., : விசாகபட்டினம் கடலில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஐ.என்.எஸ். சிந்துரக்ஷாக் நீர்மூழ்கி கப்பல் தீ விபத்துக்குள்ளானது. இதில் ஒரு கடற்படை வீரர் பலி. 2 பேர் காயம். இதன் பின், பராமரிப்புக்காக ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டது. பழுதுபார்க்கும் பணி முடிந்து, 2013 ஜன., 27ல் இந்திய கடற்படையில் சேர்ப்பு.
2011 ஜன., : மும்பையில் சங் ராக் கலங்கரை விளக்கம் அருகே, ஐ.என்.எஸ். வித்யாகிரி கப்பல், சைப்ரஸ் நாட்டின் எம்.வி. நேர்ட்லேக் கப்பலுடன் மோதியது. இதையடுத்து
வித்யாகிரி கப்பலின் இன்ஜின் மற்றும் பாய்லர் அறையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. பின் இக்கப்பல் கடற்
படையில் இருந்து விலக்கிக்கொள்ளப்பட்டது.
2013 ஆக., 14: மும்பை கடலில் நிறுத்தப்பட்டிருந்த ஐ.என்.எஸ்.சிந்துரக்ஷாக் நீர்மூழ்கி கப்பலில் திடீரென வெடி சத்தம் கேட்டது. பின் கப்பல் முழுவதும் தீ பற்றியது. பணியில் இருந்த 18 கடற்படை வீரர்கள் பலியாகினர். (இந்த கப்பலில் தான் 2010 பிப்.,ல் விசாகபட்டணத்தில் விபத்து ஏற்பட்டது).
2014 பிப்., 26: மும்பை கடலில் நிறுத்தப்பட்டிருந்த ஐ.என்.எஸ்., சிந்துரத்னா நீர்மூழ்கி கப்பலில், திடீரென வெளியேறிய புகை காரணமாக 7 கடற்படை வீரர்கள் காயம். 2 பேரை காணவில்லை.

கரும்பு விவசாயிகளை கசக்கி பிழிந்த காங்., அரசு

கரும்பு விவசாயிகளை, மத்தியில் ஆட்சியில் உள்ள, காங்., அரசு, கசக்கி பிழிந்து விட்டது,'' என்கிறார், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க தலைவர், என்.பழனிச்சாமி. "தினமலர்' நாளிதழுக்கு, அவர் அளித்த சிறப்பு பேட்டி: கரும்பு கட்டுப்பாட்டு சட்டம், 1966ன்படி, கரும்பில் உற்பத்தியாகும் சர்க்கரையை மட்டும் வைத்தே, கரும்புக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது கரும்பில் இருந்து மொலாசஸ், எத்தனால், கழிவிலிருந்து உரம், சக்கையிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்தத் துணை பொருட்களில் கிடைக்கும் லாபத்தில், விவசாயிகளுக்கு பங்கு கொடுக்கப்படுவதில்லை. இதுவரை இருந்த மத்திய அரசுகள், துணை பொருட்களில் கிடைக்கும் லாபத்தில் பங்கு கொடுக்கும் வகையில் சட்டத்தை மாற்ற, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்டுமானம், 8.5 சதவீதம் உள்ள கரும்புக்கு விலை நிர்ணயித்து, அதற்கு மேல், கிடைக்கும் சர்க்கரைக்கு கணக்கிட்டு, விலை கொடுக்கப்பட்டது. மத்திய அரசு, சர்க்கரை ஆலை உரிமையாளர்களுக்கு சாதகமாக, கரும்பு கட்டுமானத்தை, 9 சதவீதமாக உயர்த்தியது. தற்போது விலை நிர்ணயம் செய்ய, கட்டுமானத்தை, 9.5 சதவீதமாக உயர்த்தியது, விவசாயிகளுக்கு நஷ்டமாகும்.
அதிகரித்த உற்பத்தி செலவு : மத்திய அரசு உர மானியத்தை ரத்து செய்து விட்டது. உர விலை தற்போது, 100 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. டீசல் விலையை, மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால், உற்பத்திக்கு அதிகம் செலவழிக்க வேண்டியுள்ளது. எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையில், "உற்பத்தி செலவுடன், அதில், 50 சதவீதம் சேர்த்து, கட்டுபடியான விலை கொடுக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, பரிந்துரை செய்யப்பட்டது; இதுவரையிலும், அந்தப் பரிந்துரையை, மத்திய அரசு அமல்படுத்தவில்லை.
உற்பத்தி செலவை பற்றி கவலைப்படாமல், துணை பொருட்களை கணக்கில் எடுக்காமல், சர்க்கரைக்கு மட்டும், விலை நிர்ணயம் செய்வது மோசடி. சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் கொள்ளையடிக்க வழிவகுக்கிறது.

கமிஷன் அறிக்கை : கடந்த காலங்களில், கரும்புக்கு சட்டப் பூர்வ விலையின்படி, விலை நிர்ணயிக்கப்பட்டது. தற்போது சட்டப்பூர்வ விலையை நீக்கி விட்டு, எப்.ஆர்.பி. (பேர் ரெமுனரேடிவ் பிரைஸ்) என, நிர்ணயம் செய்கிறது. மத்திய அரசை, தனியார் சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் கேட்டதற்கு இணங்க, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரங்கராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, கரும்பு தொழிலை மேம்படுத்துவது சம்பந்தமாக அறிக்கை கொடுக்கும்படி பணிந்தது. அந்தக்குழு, சர்க்கரை ஆலை உரிமையாளர்களுக்கு சாதகமாக அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின்படி, கரும்பு பகுதியை நீக்குவது, விவசாயிகளை அலைக்கழிக்கும்; கரும்பை விற்க முடியாத நிலை ஏற்படும். ஆலையில் உற்பத்தியாகும் சர்க்கரையில், 10 சதவீதம் "லெவி'யாக மத்திய அரசுக்கு வழங்க வேண்டும். இந்த சர்க்கரையைத் தான் அரசு, ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் விற்கிறது. தற்போது "லெவி' சர்க்கரை ரத்து செய்யப்பட்டு விட்டது.
உற்பத்தி சர்க்கரையில், மத்திய அரசு உத்தரவின்படி, மாதம் எவ்வளவு சர்க்கரையை விற்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. உள்நாட்டு தேவையை பொறுத்து, ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற விதியிருந்தது; தற்போது இது, ரத்து செய்யப்பட்டு விட்டது. ரங்கராஜன் கமிட்டி பரிந்துரை, ஆலை உரிமையாளர்களுக்கு சாதகமாக அமைந்ததாக கருத தோன்றுகிறது. அதனால், மத்திய அரசு ஆதரவுடன், தனியார் சர்க்கரை ஆலைகள், மாநில அரசின் பரிந்துரை விலையை கொடுக்க மறுக்கின்றன.

சென்னையில் பிரசாரம் துவக்குகிறார் ஜெ.,:வேகமாக தயாராகும் பயண திட்டம்

லோக்சபா தேர்தல் தேதி, எந்த நேரத்திலும் அறிவிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, நாடு முழுவதும் உள்ள, அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. தமிழகத்தில், பெரும்பாலான கட்சிகளுக்கு, வரும் தேர்தல், வாழ்வா, சாவா பிரச்னையாக உள்ளது.

இந்தச் சூழலில், தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க., கூட்டணி குறித்தெல்லாம் கவலைப்படாமல், தேர்தல் பணிகளை துவக்கி விட்டது. உள்ளாட்சி பதவிகளில், 80 சதவீதத்திற்கும் மேல், அ.தி.மு.க.,வினரே உள்ளனர். கூட்டுறவு சங்கங்களிலும், அ.தி.மு.க.,வினரே பதவி வகிக்கின்றனர். நிர்வாகிகளில் பெரும்பாலானோர், ஏதேனும் ஒரு பதவியில் உள்ளனர்.அதனால், லோக்சபா தேர்தலில், தமிழகம், புதுவை உட்பட, 40 தொகுதிகளையும், எப்படியும் கைப்பற்றி விட வேண்டும் என, தீர்மானித்து செயல்பட்டு வருகிறது.
மத்தியில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வுக்கு, தனி பெரும்பான்மை கிடைக்காவிட்டால், அதிக சீட்டுகளை பெறுவதன் அடிப்படையில், அனைவரும், அ.தி.மு.க., பக்கம் திரும்புவர். முதல்வர் ஜெயலலிதா, பிரதமராக வாய்ப்பு கிடைக்கும் என, அ.தி.மு.க.,வினர் நம்புகின்றனர். அதனால், அவரை, பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி, அ.தி.மு.க., தேர்தல் பணிகளை துவக்கி விட்டது.

திருவாரூரில் இன்று தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க மாநாடு

சேலம்: தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின், 17வது மாநில மாநாடு, இன்று, திருவாரூர், தெற்கு வீதி, ஏ.கே.எம்., திருமண மண்டபத்தில், காலை, 10 மணியளவில் துவங்குகிறது. காலை 9 மணிக்கு, திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பேரணி நடக்கிறது.
மாநில துணை செயலாளர் குமார் தலைமை வகிக்கிறார். துணைத்தலைவர்கள் சேகர், செல்வம், துணை செயலாளர் சண்முகவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கிறார்கள். மாநில துணைத்தலைவர் தேவராஜன், பேரணியை துவக்கி வைக்கிறார்.
மாநில அமைப்பு செயலாளர் லவ்லிபாலகிருஷ்ணன், 17வது மாநாட்டு கொடியை ஏற்றி வைக்கிறார். நாகை மாவட்ட தலைவர் செல்வராஜ், திருவாரூர் மாவட்ட தலைவர் புஷ்பவல்லி வீராச்சாமி, தஞ்சை மாவட்ட தலைவர் மங்கையர்கரசி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
நிறுவனரும், மாநில பொது செயலாளருமான மணி, சங்க கொடியை ஏற்றி வைக்கிறார். மாநில பொருளாளர் பாஷா, துணை பொது செயலாளர் ஜெயபால் ஆகியோர் தையல் மிஷன்கள் கண்காட்சி அரங்கை திறந்து வைக்கின்றனர். தொடர்ந்து, பொருளாதார மேம்பாட்டுக்கு தையல்தொழில் பலமா? பலவீனமா? என்கிற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது.
அதையடுத்து, மாவட்ட நிர்வாகிகள் கவுரவிக்கப்படுகிறார்கள். மாலை, 4 மணிக்கு மாநில தலைவர் சுப்ரமணி தலைமையில் மாநாடு துவங்குகிறது. மாநில துணைத்தலைவர் சாமுவேல், துணை செயலர் சாந்தி, நாகை மாவட்ட செயலாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தி.மலை மாவட்ட தலைவர் துரை வரவேற்கிறார்.
தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர். பேராசிரியர் சொக்கலிங்கம், முனைவர் பாலசாண்டில்யன் ஆகியோரின் சிறப்பு சொற்பொழிவு, நலிந்த கலைஞர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.
திருவாரூர் மாவட்ட செயலாளர் ரவி நன்றி கூறுகிறார்.

சேலத்தில் அனுமதியின்றி இயக்கப்படும் ஆட்டோக்கள் புதிய போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுப்பாரா?

சேலம்: சேலம் மாநகரில் அனுமதி பெறாமல் இயங்கும் ஆட்டோக்கள் மீது புதிய போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சேலம் மாநகரில் செயல்படும், மூன்று வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம், 50 ஷேர் ஆட்டோக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மாநகரில், மொத்தம், 7,200 ஆட்டோக்கள் இயங்குகின்றன. இதில், 1,200 ஆட்டோக்கள் மட்டுமே, ஸ்டாண்டுகளில் நிறுத்தப்பட்டு முறையாக இயக்கப்படுகிறது.
ஆனால், 6,000 ஆட்டோக்கள் மாநகரில், முறையாக அனுமதி பெறாமல், ஷேர் ஆட்டோக்களாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஆட்டோக்களில் கடந்த மாதம் வரை, ஐந்து ரூபாய் முதல், ஏழு ரூபாய் வரை, தான் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், ஃபிப்.,1ம் தேதி முதல் கட்டணம், 10 ரூபாயாக உயர்த்தப்பட்டு, அதிரடி வசூல் நடத்தப்பட்டு வருகிறது.
போலீஸ் கமிஷனராக இருந்த மஹாலி, கோல்டன் ஹவர் திட்டத்தை செயல்படுத்தி வந்தார். இந்த திட்டத்தில் ஆட்டோ டிரைவர்களும் இருந்ததால், கமிஷனர் மஹாலி, ஆட்டோக்களை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார். இதனால், ஆட்டோ டிரைவர்கள், தங்கள் இஸ்டம் போல் ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வந்த போக்குவரத்து பிரிவு போலீஸார், அதிகாரிகள் மீது கமிஷனர் மஹாலியிடம் புகார் அளித்ததால், அவர்களும் இதை கண்டு கொள்ள வில்லை. இதனால், மாநகரில், ஆட்டோக்கள், அதை இயக்கும் டிரைவர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதோடு, விபத்துக்களும் அதிகரித்தே காணப்படுகிறது.
ஆட்டோக்களை இயக்கும் டிரைவர்கள் பெரும்பாலானோர், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை பயன் படுத்துபவர்களாக இருப்பதால், ஆட்டோக்களில் ஏறும் பயணிகள் மட்டுமின்றி, சாலையில் வாகனங்களை இயக்குபவர்களும், அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் அதிகரித்துள்ள ஆட்டோக்கள், அவற்றால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க ஆட்டோக்களை முறைப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. புதிதாக பொறுப்பெற்றுள்ள, சேலம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், இந்த பிரச்னைக்கு முடிவு கட்டுவார் என்ற எதிர்பார்ப்பு, அனைவரிடமும் எழுந்துள்ளது.
இது குறித்து கமிஷனர் அமல்ராஜியிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:
தற்போது தான் பொறுப்பை ஏற்றுள்ளேன். சேலத்தில் ரவுடிகள் அட்டகாசம் குறைந்துள்ளதாகவும், குண்டாஸ் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மட்டும் எனக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆட்டோக்களின் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
சேலம் மாநகர ஷேர் ஆட்டோ சங்க தலைவர் தட்சணாமூர்த்தி, செயலாளர் ஸ்ரீதரன் ஆகியோர் கூறியதாவது:
சேலம் மாநகர போலீஸார், போக்குவரத்து துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். சேலம் மாநகரில், 50 ஷேர் ஆட்டோக்களை மட்டுமே இயக்கி கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதற்கு மாறாக அதிக அளவில் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி கட்டணத்தை, 10 ரூபாயாக அதிகரித்தும் வசூலித்து வருகின்றனர்.
ஆனால், நாங்கள் பழைய கட்டணத்தையே வசூலித்து வருகிறோம். மாநகரில் ஷேர் ஆட்டோக்கள் பெயரில் இயக்கப்படும், பயணிகள் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுத்தாலே பிரச்னை முடிவுக்கு வந்து விடும், என்றனர்.

மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ் பக்தர்கள் வரத்து குறைவால் "வெறிச்'

மேட்டூர்: கர்நாடகாவில் உள்ள ஸ்ரீமலை மாதேஸ்வரன் ஸ்வாமி கோவிலில் மஹாசிவராத்திரி பண்டிகை விமர்சையாக நடக்கும். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டத்தில் இருந்து மேட்டூர் வழியாக சிவராத்திரிக்கு ஏராளமான பக்தர்கள் ஸ்ரீமலைக்கு செல்வர்
ஃபிப்.,27 மஹாசிவராத்திரியை முன்னிட்டு, மேட்டூரில் இருந்து நேற்று முதல் மாதேஸ்வரன்மலைக்கு சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. மொத்தம், 50 சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. மாதேஸ்வரன் மலைக்கு நேற்று குறைவான பக்தர்களே சென்றதால் பஸ்களில் பெரும்பாலான இருக்கை காலியாக இருந்தது.
பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்ததால், ஐந்துக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் மேட்டூர் பஸ் ஸ்டாண்ட் ரோட்டோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று மேட்டூரில் இருந்து அதிக பக்தர்கள் மாதேஸ்வரன் மலைக்கு செல்லலாம் என்று போக்குவரத்து கழக ஊழியர்கள் தெரிவித்தனர்.

மதுரை மாவட்ட ஒழுங்குமுறை கூடங்கள் நிரம்பின.......! வறட்சி காலத்திலும் தானியங்கள் சேமிப்பு

மதுரை: மதுரை மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் எந்த ஆண்டிலும் இல்லாதவாறு, வறட்சியான இக்காலகட்டத்திலும் நிரம்பி வழிகின்றன.
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்யும்போது, அத்தொகையில் ஒரு சதவீதம் அரசுக்கு, மார்க்கெட் கட்டணமாக (செஸ்) செல்கிறது. இதனைக் கொண்டு, விவசாயிகளுக்கு கடனுதவி, விளைபொருட்களை சேமிக்கும் கிட்டங்கி வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. இதற்கு குவிண்டாலுக்கு நாளொன்றுக்கு 30 காசுகள் வாடகை செலுத்த வேண்டும். இவை, வேளாண் விற்பனை வாரியம் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.இவ்வகையில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், மதுரை, உசிலம்பட்டி, திருமங்கலம், வாடிப்பட்டியில், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலான விளைபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. நெல், சோளம், குதிரைவாலி போன்ற தானியங்கள் 6500 மெட்ரிக் டன் அளவிற்கு உள்ளன. கடந்த 2 ஆண்டாக சரியான மழைப்பொழிவு, விளைச்சல் இல்லாத நிலையிலும், விவசாயிகள் இங்கு சேமித்து வைத்திருப்பது
குறிப்பிடத்தக்கது.ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விவசாயிகள் வைத்திருக்கும் விளைபொருட்களுக்கு ரூ. 2 லட்சம் வரை ஐந்து சதவீத வட்டியில் கடனுதவியும் பெறலாம். இவ்வகையில், கடந்த ஆண்டைவிட, இந்தாண்டு ஒரு கோடி ரூபாய் அளவிற்கு கூடுதலாக கடன் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கதே.கடந்த ஆண்டு 155 விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை வைத்துவிட்டு, ரூ. 1.78 கோடி கடனுதவி பெற்றனர். ஆனால் இந்த ஆண்டு 193 விவசாயிகள் ரூ.2.82 கோடி கடனுதவி பெற்றுள்ளனர். மதுரை வேளாண் விற்பனை
குழுவின் இச்சாதனையை மாநில இயக்குனர் அனில்மேஷ்ராம் பாராட்டியுள்ளார்.இதன் செயலாளர் தவசுமுத்து கூறியதாவது: கடந்த காலங்களை காட்டிலும் தற்போது ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை விவசாயிகள் அதிகளவு பயன்படுத்துகின்றனர். கூடுதல்
கிட்டங்கி வசதி, அதிகாரிகள் விவசாயிகளிடம் ஏற்படுத்திய விழிப்புணர்வே
இதற்கு காரணம். விவசாயிகள் தானியங்களை சேமித்து வைப்பதற்கேற்ற ஈரப்பதத்துடன் உலரவைத்து கொண்டு வரலாம். இலவசமாக உலரவைப்பதற்கான களமும் இங்கு உள்ளது.இங்கு சேமித்து வைப்பதால், பொருட்களின் விலை கூடும்போது அதனை விற்கலாம். இதனால் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்பதை தவிர்க்க முடியும். மேலும் ஆறுமாதங்களுக்கு பின், ஏற்படும் மார்க்கெட் நிலவரத்தையும் இங்குள்ள 'டிஸ்பிளே'யில் அறிந்து கொள்ள முடியும்.இதுதவிர பவர் டில்லர், ரோட்டோவேட்டர், கதிரடிக்கும் இயந்திரம் என வேளாண் கருவிகளையும், மிகக்குறைந்த வாடகைக்கு பெறும் வசதியும் உள்ளது, என்றார்.


போக்குவரத்து நெரிசலுக்கு விடிவுகாலம் வந்தது : பண்ருட்டி ரயில்வே மேம்பாலத்திற்கு பூமி பூஜை

பண்ருட்டி : பண்ருட்டி - சென்னை சாலை ரயில்வே கேட்டிற்கு 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
பண்ருட்டி - சென்னை சாலையில் (வி.கே.டி., தேசிய நெடுஞ்சாலை) ரயில்வே கேட் அடிக்கடி மூடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், அவசரத்திற்குச் செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் கூட நேரத்திற்கு சம்பவ இடத்திற்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால், ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பொது நல அமைப்புகள் நீண்ட நாட்களாக வைத்த கோரிக்கையின் பேரில், கடந்த 2007ம் ஆண்டு ரயில்வே துறை மேம்பாலம் கட்ட அனுமதி அளித்தது.
அதனைத் தொடர்ந்து நகாய் சார்பில் பண்ருட்டி வி.கே.டி., சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்ட அனுமதியளித்தது. இதனையடுத்து தமிழக நெடுஞ்சாலைத்துறை பாலம் திட்டங்கள் துறை சார்பில் 23 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயார் செய்தது.
இந்த பாலம், எல்.என்.புரம் ஊராட்சி எல்லை வ.உ.சி., பஸ் ஸ்டாப்பில் இருந்து 50 மீட்டர் தொலைவில் மேம்பாலத்திற்கான ஜீரோ பாயிண்ட் துவங்கி 850 மீட்டர் தொலைவில் பண்ருட்டி நான்கு முனை சந்திப்பை அடைகிறது.
இதில் ஜீரோ பாயிண்ட்டில் இருந்து 114 மீட்டரிலிருந்து பாலம் ஏறுவதற்கான துவக்கம் துவங்கி, 762 மீட்டரில் மார்க்கெட் அருகில் இறங்குகிறது.
சாலையின் இருபுறமும் ஐந்தரை மீட்டர் அகலத்தில், சர்வீஸ் சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக கடந்த சில மாதங்களாக ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்படாமல் தள்ளி போனது.
நீண்ட இழுபறிக்குப் பின் கடந்த வாரம் சென்னையில் துறை அதிகாரிகள் தலைமையில் நடந்த கூட்டத்தில், கடலூர்
சிவசுவாதி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்று ரயில்வே மேம்பாலப் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
இதில் நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் உதவிக் கோட்டப் பொறியாளர் சிவக்குமார், உதவி பொறியாளர் மணிகண்டன், அ.தி.மு.க., ஒன்றிய பொருளாளர் பெருமாள், முன்னாள் ஊராட்சித் தலைவர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

அடுக்கு மாடி குடியிருப்புவாசிகளுக்கு ஓரவஞ்சனை : மாநகராட்சி அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு!

கோவை : அடுக்கு மாடிக் குடியிருப்பி லுள்ள ஒரு வீட்டின் உரிமையாளர் சொத்து வரி செலுத்தாவிட்டாலும், ஒட்டு மொத்த குடியிருப்புக்கும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுமென்ற மாநகராட்சியின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கோவை நகரில், நிலத்தின் தேவையும், மதிப்பும் அதிகரித்தும் வருவதால், சமீபகாலமாக அடுக்கு மாடிக் குடியிருப்புகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது. நகர மயமாதலில், அடுக்கு மாடிக் குடியிருப்புகளின் வளர்ச்சியைத் தவிர்க்கவே முடியாது என்பதால், இவற்றில் வாழும் மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, திட்டங்களைத் தீட்ட வேண்டிய அவசியம், மாநகராட்சி நிர்வாகத்துக்கு உள்ளது.
ஆனால், இவற்றில் வசிப்போர் யாரும், ஓட்டுப்போடாதவர்கள் என்ற தவறான அபிப்பிராயத்தில், அடுக்கு மாடிக் குடியிருப்புவாசிகளை மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் புறக்கணிப்பது தொடர்ந்து வருகிறது; வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, பூத் ஸ்லிப் கொடுப்பது உட்பட பல விஷயங்களிலும், அடுக்கு மாடிக் குடியிருப்புகளை முற்றிலுமாகத்தவிர்ப்பது, வாடிக்கையாகி விட்டது.
இதன் அடுத்த கட்டமாக, அடுக்கு மாடிக் குடியிருப்பு வாசிகளுக்கு, மாநகராட்சி நிர்வாகத்திலிருந்து சமீபத்தில் பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது; அதாவது, அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் உள்ள வீடுகளில் (பிளாட்) ஒரே ஒரு வீட்டுக்கு சொத்துவரி செலுத்தா விட்டாலும், அந்த குடியிருப்புக்கான ஒட்டு மொத்த குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படுமென்பதே அந்த எச்சரிக்கை .
தனி வீடுகளைப்போல, அடுக்கு மாடிக் குடியிருப்புகளுக்கு, தனித்தனி குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுவதில்லை; மாறாக, ஒரே இணைப்பாக 'பல்க் கனெக்ஷன்' மட்டுமே வழங்கப்படுகிறது; அதிலிருந்து அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்பில் 100 வீடுகள் இருக்கும்போது, ஒரே ஒரு வீட்டின் உரிமையாளர் சொத்து வரி செலுத்தாமல் இருந்தாலும், அதற்காக குடிநீர் இணைப்பைத் துண்டிப்பது என்பது, சட்டவிரோதம் என்று பல தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஒரு தெருவில் 100 வீடுகள் இருப்பதைப்போலவே, ஓர் அடுக்கு மாடிக்குடியிருப்பில் 100 வீடுகள் இருப்பதால், அவற்றையும் ஒரு தெருவாகவே உள்ளாட்சி நிர்வாகம், கணக்கில் கொள்ள வேண்டும்; மாநகராட்சியின் இந்த நடவடிக்கை, ஒரு தெருவில் ஒரு வீட்டில் சொத்து வரி செலுத்தாத காரணத்துக்காக, தெரு முழுவதும் உள்ள இணைப்புகளைத் துண்டிப்பதற்குச் சமமாகவே கருதப்படுகிறது.
அடுக்கு மாடிக் குடியிருப்புகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு குடியிருப்பிலும் ஒன்று அல்லது இரண்டு 'பிளாட்' களிலாவது, நிரந்தரமாக யாரும் குடியிருக்காமல், அவ்வப்போது மட்டும் குடியிருப்பது வழக்கம்; அதேபோல, குடியிருப்போர் நலச்சங்கம் அமைத்தாலும், அதன் முடிவுக்குக் கட்டுப்படாமல், முரணாக செயல்படுவோரும் ஒவ்வொரு குடியிருப்பிலும் ஒன்றிரண்டு பேர் இருப்பதும் வாடிக்கை.
இத்தகைய 'பிளாட்' உரிமையாளர்கள், மற்றவர்களைப் பாதிப்புக்குள்ளாக்க வேண்டுமென்பதற்காகவே, ஓரிருவர் இந்த சொத்து வரியைச் செலுத்தாமல் தவிர்க்கும் வாய்ப்புகள் அதிகம்; இதனால், ஒருவர் செய்யும் தவறுக்காக, மீதமுள்ள 99 பேர்க்கும் சேர்த்து, மாநகராட்சி நிர்வாகம் தண்டனை தருவது எந்த வகை நியாயம் என்று குடியிருப்புவாசிகள் கொந்தளிக்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன், இதேபோன்ற முயற்சி நடந்தபோது, கோயம்புத்துார் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பு, அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது; சட்டரீதியாகவும் அதைத்தடுக்க முயன்றதன் காரணமாக, அந்த திட்டம் கை விடப்பட்டது. அதேபோல, இப்போது வந்துள்ள அறிவிப்புக்கும், இவ்வமைப்பின் செயலர் கதிர்மதியோன், தனது எதிர்ப்பைப் பதிவு செய்து, மாநகராட்சி கமிஷனருக்கு கடிதமும் எழுதியுள்ளார்.
அவர் கூறுகையில், ''சட்டத்தை மதிக்காத ஒருவர் செய்யும் தவறுக்காக, சட்டத்தை மதிக்கும் 99 பேரைத் தண்டிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை; தற்போது, எத்தனை ஆண்டுகள் கழித்து சொத்து வரி செலுத்தினாலும், அதே தொகை மட்டுமே வசூலிக்கப்படுகிறது; இந்த ஆண்டுக்கான சொத்து வரியை, அடுத்த ஆண்டில் செலுத்தினால், பல மடங்கு அபராதம் வசூலிக்கலாம்,'' என்றார்.
இது குறித்து, மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பல கோடி ரூபாய் செலவழித்து, 'பிளாட்' வாங்கும் பலரும், சில ஆயிரம் ரூபாய் சொத்து வரியைக் கூட செலுத்த மறுக்கின்றனர்; அவர்களை எச்சரிக்கும் விதமாகவே, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது; ஆனால், இதுவரை எந்த அடுக்கு மாடிக் குடியிருப்பின் மீதும் இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை,'' என்றார்.
ஒரு வேளை, இந்த அறிவிப்பை ஒன்றிரண்டு அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் செயல் படுத்தினாலும், ஒட்டு மொத்தமாக, கோவையிலுள்ள அடுக்கு மாடிக் குடியிருப்புவாசிகளின் கோபத்தையும் மாநகராட்சி நிர்வாகம் சம்பாதிக்கும் என்பது நிச்சயம்.

பல்லாவரம் நகராட்சியில் புதுமை : பொதுப்பணி துறையினர் அலட்சியம் : கிணற்றின் மீது ரேஷன் கடை

பல்லாவரம் : பல்லாவரத்தில் கிணற்றின் மீது ரேஷன் கடை கட்டப்பட்டு உள்ளது. கட்டடத்தின் ஆபத்தான நிலைமையை கருதி, உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகள், அந்த கட்டடத்தில், உணவு பொருட்களை வைக்க முடியாது என, மறுத்து விட்டனர்.
பல்லாவரம், சரஸ்வதி காலனியில், 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிணறு இருந்தது. 20 அடி விட்டம் கொண்ட அந்த கிணற்றில், எப்போதும் 70 அடிக்கு தண்ணீர் இருக்கும். பகுதிவாசிகள், அந்த கிணற்று நீரை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்வரை பயன்படுத்தி வந்தனர்.
ரூ.7 லட்சம் வீண்
இந்த நிலையில், சரஸ்வதி காலனி, தர்கா சாலையில், வாடகை கட்டடத்தில் இயங்கும் (எண்:44) ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் கட்ட எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, கடந்த ஆண்டு, ஏழு லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
கடந்த, மூன்று மாதங்களுக்கு முன், ரேஷன் கடை கட்ட, அந்த பகுதியில் இடம் தேடிய பொதுப்பணி துறை அதிகாரிகள், கிணற்றின் மீதே, ரேஷன் கடையை கட்ட திட்டம் தீட்டினர்.
இதற்கு, அந்த பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தும், கடந்த மாதம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு, கடந்த, 15ம் தேதி திறப்பு விழா நடந்தது.
இந்த நிலையில், கிணறு மீது கட்டப்பட்ட கட்டடத்தின் வலு மீது ஏற்பட்ட சந்தேகத்தால், அந்த கட்டடம் தங்களுக்கு வேண்டாம் என, உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அதனால், மக்கள் வரிப்பணம் ஏழு லட்சம் ரூபாய் வீணடிக்கப்பட்டதாக பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
௩௦ டன் எடை தாங்குமா?
இது குறித்து, சரஸ்வதி காலனி பகுதிவாசிகள் கூறுகையில், 'கிணற்று நீரால், எங்கள் பகுதியின் நிலத்தடி நீர் குறையாமல் இருந்தது. கிணற்றின் மீது கட்டடம் கட்ட முயன்ற போது, நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால், அதையும் மீறி கட்டிவிட்டனர். இந்த கட்டடம் கட்டப்படும் போது, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் நேரில் வந்து பார்த்தும், தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை' என்றனர்.
உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், 'டன் கணக்கில் பொருள் இருப்பு வைத்து வினியோகிக்க வேண்டிய பாதுகாப்பான நிலையில், கட்டடம் இல்லை. கட்டடத்தை கட்டி தருவதுடன் அதிகாரிகள் பணி முடிந்தது. அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு? அந்த கட்டடம் வேண்டாம் என, கூறிவிட்டோம்' என்றனர்.
மேலும் இரண்டு தளம்!
தற்போது வாடகைக்கு இயங்கும் ரேஷன் கடையில், 1,400 குடும்ப அட்டைகளுக்கு வினியோகம் நடக்கிறது. 30 ஆயிரம் டன் எடையில், மாதம் தோறும், உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.
புதிய கட்டடத்தில், தரை தளத்தில் ரேஷன் கடையும், முதல் தளத்தில் கூட்டுறவு துறை அலுவலகமும், இரண்டாம் தளத்தில், நுாலகமும் அமைக்க, திட்டமிடப்பட்டு உள்ளது. இப்படி, கட்டத்தின் உயரத்தை அதிகரித்தால், பாரம் தாங்காமல், கட்டடம் இடிந்து விழும் நிலை கூட ஏற்படலாம் என, அந்த பகுதிவாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
Click Here

அ.தி.மு.க., தி.மு.க.வுக்காக பிரசாரத்தில் குதிக்கும் நடிகைகள்

சென்னை, பிப். 27–
பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் தமிழக அரசியல் கட்சிகள் பிரசாரத்துக்கான ஆயத்த பணிகளை துவங்கியுள்ளன. தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரல்கள் தயாராகி வருகின்றன. அத்துடன் நடிகர், நடிகைகளும் பிரசார களத்தில் இறக்கி விடப்படுகிறார்கள்.
அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக நடிகர், நடிகைகள், டைரக்டர்கள் பலர் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.
நடிகர்கள் ராமராஜன், ஆனந்தராஜ், சிங்கமுத்து, வையாபுரி, டைரக்டர்கள் ஆர்.வி.உதயகுமார், நாஞ்சில், பி.சி.அன்பழகன் ஆகியோர் அ.தி.மு.க.வில் முன்னணி நட்சத்திர பேச்சாளர்களாக உள்ளனர். அவர்கள் பிரசாரத்தில் தீவிரமாக இறங்குகின்றனர்.
நடிகர்கள் தியாகு, குண்டு கல்யாணம், நடிகை குயிலி போன்றோரும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டுகிறார்கள்.
தி.மு.க.வில் நடிகை குஷ்பு முன்னணி நட்சத்திர பேச்சாளராக உள்ளார். அவரை தமிழகம் முழுவதிலும் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
நடிகர்கள் வாகை சந்திரசேகர், குமரிமுத்து போன்றோரும் தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டுகிறார்கள்.
காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகளும் தேர்தல் பிரசாரத்துக்காக நடிகர், நடிகைகளுக்கு வலை விரித்துள்ளன. சில நடிகர்களை ரகசியமாக அணுகி அழைப்பு விடுத்து வருகின்ற

உமா மகேஸ்வரி கொலை: 4-வது நபர் முக்கிய சாட்சியாகிறார்?

சென்னை, பிப். 27,
சென்னை பெண் என்ஜினீயர் உமா மகேஸ்வரி கடந்த 13–ந் தேதி கொலை செய்யப்பட்டார்.
22–ந் தேதி அவரது உடல் கண்டு பிடிக்கப்பட்டது. சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கில் துப்பு துலக்கினார்கள். உமா மகேஸ்வரியின் ஏ.டி.எம். கார்டு மூலம் குற்றவாளிகள் சிக்கினார்கள்.
பணம் எடுத்த போது ரகசிய கேமராவில் பதிவான உருவத்தைக் கொண்டு போலீசார் குற்றவாளிகளை பொறி வைத்து பிடித்தனர். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் உத்தம் மண்டல் (23), ராம் மண்டல் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பெண் என்ஜினீயரை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த முக்கிய குற்றவாளி உஜ்ஜன் மண்டல் (22) நேற்று கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டான். இன்று அவன் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறான். இந்திரஜித் என்பவனும் சிக்கி உள்ளான்.
முதலில் கைது செய்யப்பட்ட உத்தம் மண்டல், ராம் மண்டல் ஆகியோரை கோர்ட்டில் ஆஜர் செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சம்பவ இடத்துக்கு நேரில் அழைத்துச் சென்று கொலை சம்பவத்தை உறுதி செய்தனர். அவர்களிடம் இருந்த உமா மகேஸ்வரியின் கிரிடிட் கார்டு, காது தோடு, மோதிரம், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
3–வதாக கைது ஆன முக்கிய குற்றவாளியான உஜ்ஜன் மண்டல் இன்று செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறான். பின்னர் அவனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
என்ஜினீயர் உமா மகேஸ்வரியை கடத்திச் சென்று கற்பழித்த 3 பேருக்கு, அவர்களுடன் கட்டி வேலை பார்த்து வந்த இந்திரஜித் மண்டல் என்பவர் உதவி செய்துள்ளான். அவனையும் போலீசார் பிடித்துச் சென்றனர்.
ஆனால், அவன் ‘‘யாராவது வந்தால் தகவல் சொல்வதற்காக 3 பேருக்கும் காவலாக தூரத்தில் நின்றேன்’’ என்று தெரிவித்துள்ளான்.
எனவே, இந்திரஜித் மண்டல் இந்த கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளான். விரைவில் அடையாள அணிவகுப்பு நடைபெற உள்ளது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தயாராகி வருகிறது. வழக்கை விரைவில் முடித்து கொலையாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதில் போலீசார் தீவிரமாக உள்ளனர்.


முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் தே.மு.தி.க., பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

சென்னை, பிப்.27-
முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் தே.மு.தி.க., பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு
திருத்தணி தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ.வான அருண் சுப்ரமணியனும், அணைக்கட்டு தொகுதி பா.ம.க எம்.எல்.ஏவுமான கலையரசனும் முதலமைச்சர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் இன்று சந்தித்து பேசினார்கள்.

தங்களது தொகுதி வளர்ச்சி குறித்து இவர்கள் இருவரும் முதல்வரை சந்தித்து பேசியதாக கூறப்பட்டாலும், கட்சி தலைமை மீதுள்ள அதிருப்தி காரணமாகவே இவர்கள் முதல்வரை சந்தித்துள்ளதாக பேசப்படுகிறது.

இதன் மூலம் தேமுதிக அதிருப்தி எம்.எல்,ஏக்களின் பலம் 8 ஆக உயர்ந்துள்ளது. தற்பொதுள்ள சூழ்நிலையில் விஜயகாந்தை போலவே அவரது எதிர்க்கட்சி தலைவர் பதவியும் தடுமாறி வருகிறது.

அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக ஆதிராஜாராம் நியமனம்:

சென்னை, பிப். 27–அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக ஆதிராஜாராம் நியமனம்: ஜெயலலிதா
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அமைப்பு செயலாளர் பொறுப்பில் ஆதிராஜாராம் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். இவருக்கு கழக உடன் பிறப்புகள் முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பாராளுமன்ற தேர்தல் கருத்து கணிப்பு பற்றி புகார்: தேர்தல் கமிஷன் நடவடிக்கை

புதுடெல்லி, பிப்.27-பாராளுமன்ற தேர்தல் கருத்து கணிப்பு பற்றி புகார்: தேர்தல் கமிஷன் நடவடிக்கை

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகி மக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், பணம் பெற்றுக்கொண்டு தேர்தல் கருத்துக்கணிப்புகளில் குறிப்பிட்ட கட்சிகளுக்கு சாதகமாக சில நிறுவனங்கள் செயல்படுவதாக 'ஸ்டிங் ஆபரேஷன்' என்னும் ரகசிய நடவடிக்கை மூலம் இந்தி செய்தி சேனல் ஒன்று அம்பலப்படுத்தியது.

இதில் பிரபல நிறுவனங்கள் உள்பட 11 நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்திருப்பது, தேர்தல் கருத்துக்கணிப்புகள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பிரச்சினையை தேர்தல் கமிஷனிடம் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு தலைமை ஏற்றுள்ள காங்கிரஸ் எடுத்துச் சென்றுள்ளது. இத்தகைய செயலில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவுசெய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் கே.சி.மிட்டல் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர், "ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கருத்துக்கணிப்புகள் குறித்து புகார் எழுந்துள்ள நிலையில், இந்த பிரச்சினையில் தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட வேண்டும்; கருத்துக்கணிப்புகளை வெளியிடுவதை கட்டுப்படுத்தி, பொருத்தமான அறிவுரைகளை வெளியிட வேண்டும்" என கூறி உள்ளார்.

மேலும், இந்திய அரசியல் சட்டம் பிரிவு 324 வழங்கியுள்ள அதிகாரத்தை தேர்தல் கமிஷன் பயன்படுத்தி, பாராளுமன்றத்தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

இதேபோன்ற ஒரு கோரிக்கையை ஆம் ஆத்மி கட்சியும் வைத்துள்ளது. அந்த கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ் கூறுகையில், "கருத்துக்கணிப்புகளை தேர்தல் கமிஷன் ஒழுங்குபடுத்த வேண்டும். ஆனால் அவற்றை தடை செய்யக்கூடாது" என தேர்தல் கமிஷனுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தேர்தல் கருத்துக்கணிப்பு தொடர்பாக செய்தி சேனல், 'ஸ்டிங் ஆபரேஷன்' நடத்தி அம்பலப்படுத்தி இருப்பது பற்றி, தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத்திடம் டெல்லியில் நிருபர்கள் நேற்று கேள்விகள் எழுப்பினர். அப்போது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என கேட்டனர்.

அதற்கு அவர், "நிச்சயமாக இந்த பிரச்சினையை கவனிப்போம். தீர ஆராய்வோம். என்ன சட்ட நடவடிக்கை தேவைப்படுகிறதோ, அது எடுக்கப்படும்" என பதில் அளித்தார்.

தேர்தல் கருத்துக்கணிப்பு தொடர்பான பொதுவான கருத்தையும் தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் வெளியிட்டார்.

அப்போது அவர், "தேர்தல் கருத்துக்கணிப்புகளை பொறுத்தமட்டில், தேர்தல் கமிஷன் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இன்றல்ல, 10 வருடங்களுக்கு முன்பு, 2004-ம் ஆண்டு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்திய பின்னர்தான் இந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டது. நாங்கள் பரிந்துரைகளையும் செய்தோம். இதற்கிடையே அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் பெற்றோம். அவையெல்லாம் மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. இப்போது மத்திய அரசுதான் இந்த விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டும்" என கூறினார்.

பா.ஜ.க.வுடன் கூட்டணி: பஸ்வான் கட்சி எம்.எல்.ஏ. விலகல்

பாட்னா பிப்.27-

பீகாரிலுள்ள முக்கிய கட்சியான ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி வருகிற மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்கப்போவதாக அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் துணைத்தலைவரும் சட்ட ஆலோசகருமான ஜாகிர் உசைன் கான் எம்.எல்.ஏ. நேற்று தனது கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதைப்பற்றி அவர் கூறுகையில், "லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் பா.ஜ.க உடனும் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உடனும் கூட்டணி வைப்பதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் இனவாத அரசியலுக்கு துணைபோக பஸ்வான் சம்மதித்துவிட்டார். இதனால் நான் எனது கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்று தெரிவித்தார்.

நளினி உள்பட 4 பேரை விடுதலை செய்ய இடைக்காலத் தடை

டெல்லி, பிப். 27–

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த 18–ந்தேதி தீர்ப்பு கூறியது. மேலும் அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்தது.

இதையடுத்து முதல்– அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடந்த தமிழக மந்திரிசபை கூட்டத்தில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளனுடன் ஏற்கனவே 23 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் என 7 பேரையும் விடு தலை செய்யும் முடிவு எடுத்தது.

இது தொடர்பாக மத்திய அரசுக்கும் தமிழக அரசு கடிதம் எழுதி 3 நாளில் கருத்து தெரிவிக்குமாறு கேட்டு இருந்தது. இதை ஏற்க மறுத்த மத்திய அரசு 7 பேர் விடுதலையை நிறுத்தி வைக்குமாறு பதில் கடிதம் எழுதியது.

மேலும் சுப்ரீம் கோர்ட்டிலும் மத்திய அரசு மனுதாக்கல் செய்தது. அதில் எந்த அடிப்படையில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்று விளக்கம் கேட்டு இருந்தது. தமிழக அரசு உத்தரவுக்கு தடை விதிக்குமாறும் கூறி இருந்தது.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் இந்த மனுவை விசாரித்து, இதில் சட்ட சிக்கல்கள் பற்றி ஆராய வேண்டி உள்ளது. எனவே 3 பேரின் விடுதலையை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு இடைக்கால தடை விதித்தது.

வழக்கு விசாரணை மார்ச் 6–ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதற்குள் மத்திய– மாநில அரசுகள், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் பதில் மனுதாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக ஒரு ரிட் மனு தாக்கல் செய்தது. அதில் நளினி, ஜெயக்குமார், ரவிச் சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய 4 பேரின் விடுதலைக்கும் தடை விதிக்குமாறு கூறியிருந்தது.

இந்த மனுவையும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு 27–ந்தேதி (இன்று) மனு மீது விசாரணை நடைபெறும் என்று அறிவித்தது. அதன்படி இன்று தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ரமணா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், ‘‘7 பேர் விடுதலையில் தமிழக அரசு மத்திய அரசின் கருத்தை கேட்டு கடிதம் எழுதி இருந்தது. ஆனால் மத்திய அரசு பதில் அளிக்கும் முன்பே கோர்ட்டுக்கு சென்று மனுதாக்கல் செய்தது ஏன்? எதற்காக இவ்வாறு அவசரம் காட்டுகிறது என்று கேள்வி எழுப்பினார்.

7 பேரையும் விடுதலை செய்ய அரசியல் சட்டம் 432–ன்படி மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் வாதாடினார்.

தேசியச்செய்திகள் சிறந்த கண்டுபிடிப்புக்கு ரூ.6 கோடி பரிசு: மஹிந்திரா நிறுவனம்

மும்பை, பிப்.27-சிறந்த கண்டுபிடிப்புக்கு ரூ.6 கோடி பரிசு: மஹிந்திரா நிறுவனம்

இந்தியாவில் பரவலாகக் காணப்படும் போக்குவரத்து மன அழுத்தம் மற்றும் மின்சாரப் பற்றாக்குறை போன்றவை இன்னமும் தீர்க்க முடியாத பிரச்சினைகளாக இருக்கின்றன. இவற்றுக்கான தீர்வினைக் கண்டுபிடிக்கும் இந்தியர்களுக்காக ஒரு மில்லியன் டாலர் பரிசுத்தொகையை ஆனந்த் மஹிந்திரா என்னும் தொழிலதிபர் அறிவித்துள்ளார். இவர் ஆட்டோமொபைல் துறையிலிருந்து விண்வெளித் தயாரிப்புகள் வரை முத்திரை பதித்துள்ள மஹிந்திரா தொழில்நிறுவனத்தின் தலைவர் ஆவார்.

நெருக்கடி மிகுந்த இந்திய போக்குவரத்து அமைப்பிற்கேற்ப இயங்கக்கூடிய தானியங்கிக் கார் ஒன்றினைக் கண்டுபிடிப்பவர்களுக்கு 7,00,000 அமெரிக்க டாலர்களும், வீட்டு உபயோக ஆற்றல் தேவைகளை சமாளிக்கக்கூடிய சூரிய சக்தி சாதனம் ஒன்றைக் கண்டுபிடிப்பவர்களுக்கு 3,00,000 அமெரிக்க டாலர்களும் அளிக்கப்படும் என்று மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.

பரிசு அடிப்படையில் தனியார் நிறுவனம் அளிக்கும் மிகப்பெரிய பரிசுத்தொகை இதுவாகும். இந்திய மதிப்பில் 6.2 கோடி மதிப்பு பெறும் இந்தப் பரிசுத்தொகையானது தினசரி இந்திய வாழ்க்கைமுறையை மாற்றக்கூடிய சாத்தியங்களை ஊக்குவிப்பதாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது.

இந்த இரண்டு சவால்களும் சமூகம், ஆற்றல் சம்பந்தப்பட்ட அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு வெளியேயும் அங்கீகாரம் பெறும் வகையிலும், நமது தினசரி வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை உணரும்வகையிலும், புதிய வர்த்தக முன்னேற்றத்தைத் தூண்டும்வகையிலும் இந்தக் கண்டுபிடிப்புகள் இருக்கவேண்டும் என்று ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளார்.

கூகுள் இணையதளம் தானியங்கிக் கார்கள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் முன்னோடியாகத் திகழ்வது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் நகரத்தில் பணியாற்றும் இக்குழுவின் தலைமைப் பொறியாளரான செபாஸ்டியன் தர்ன் அணியினர் தங்களது இந்தத் தானியங்கி கார் கண்டுபிடிப்பிற்காக அமெரிக்கப் பாதுகாப்புத்துறையிடமிருந்து 2 மில்லியன் டாலர் பரிசுத் தொகையாகப் பெற்றுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் 100 பேர் கைது


சென்னை, பிப். 27–சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் 100 பேர் கைது
வளசர வாக்கம் சின்ன போரூர் பகுதியில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வீடு உள்ளது. சத்தியமூர்த்தி பவனில் கல்வீசி தாக்குதல், ராஜீவ் சிலை உடைப்பு சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து சீமான் வீட்டை முற்றுகையிட காங்கிரசார் திரண்டனர்.
வளசரவாக்கம் நகர காங்கிரஸ் தலைவர் பாலமுருகன், வளசரவாக்கம் நகராட்சி முன்னாள் தலைவர் ஈ.சி சேகர் தலைமையில் பாலன், சோமசுந்தரம், உமா, விஜய குமார் நாகராஜ், முருகன் உள்பட 100–க்கும் மேற்பட்ட காங்கிரசார் வளசரவாக்கம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து சீமான் வீட்டை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.
வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் கைதானவர்கள் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
ராஜீவ் சிலை உடைப்பை கண்டித்து இன்று காங்கிரசார் வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தை முற்று கையிடப்போவதாக தகவல் கிடைத்தது.
இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதனால் கமிஷனர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

எண்ணூர் அனல்மின் நிலையத்திட்டம்: ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்

சென்னை, பிப். 27–section1
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
மின்சாரப் பற்றாக்குறையை அறவே அகற்றி, மின் விநியோகத்தில் தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலமாகத் திகழவும், தமிழக மக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கவும், முதல்– அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா 29.3.2012 அன்று சட்டமன்றப் பேரவையில், 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் விரிவாக்கத் திட்டம் என்னும் ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இந்த அனல் மின் திட்டம் சூப்பர் கிரிட்டிக்கல் என்னும் தொழில்நுட்பத்துடன் கூடியதாக இருக்கும் என்றும், இதன் மூலம், குறைந்த அளவு நிலக்கரியில் அதிக அளவு மின் உற்பத்தியைப் பெற இயலும் என்றும் அறிவித்திருந்தார்.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டம், எண்ணூரில் 4956 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டிலான 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க மிக உய்ய அனல் மின் திட்டப் பணிக்கு தமிழக அரசின் அனுமதி 30.03.2012 அன்று வழங்கப்பட்டது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியோடு பிற அனுமதிகளும் பெறப்பட்ட பின் இந்தத் திட்டத்தை நிறுவுவதற்கான சர்வதேச ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டது.
இந்த ஒப்பந்தப் புள்ளியில் ஹரியானா மாநிலம், குர்கானில் அமைந்துள்ள லான்கோ இன்ப்ரா டெக் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இந்த அனல் மின் திட்டமானது, தமிழ்நாட்டில் நிறுவப்படும் முதல் மிக உய்ய அனல் மின் திட்டமாகும்.
திருவள்ளூர் மாவட்டம், எண்ணூரில் மாநிலத்தில் முதன்முறையாக 4956 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டிலான 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க மிக உய்ய அனல் மின் திட்டப் பணிக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டினார்.
மேலும், இந்த திட்டத்தின் மிக முக்கிய அம்சமாகிய அனல் மின் நிலையத்தை 3,961 கோடி ரூபாய் செலவில் நிறுவுவதற்கான பணி ஆணையினை லான்கோ இன்ப்ரா டெக் நிறுவனத்தின் செயல் தலைவர் திரு எல். மதுசூதன் ராவ் அவர்களிடம் முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் ஆர். விசுவநாதன், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், எரிசக்தித் துறைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கு. ஞானதேசிகன், லான்கோ இன்ப்ரா டெக் நிறுவனத்தின் துணை மேலாண்மை இயக்குநர் எஸ்.சி. மனோச்சா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி சிலை உடைப்பு: பெரம்பூரில் காங்கிரசார் மறியல்

பெரம்பூர், பிப். 27–
பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் 2 இடங்களில் ராஜீவ் காந்தி சிலைகள் உடைக்கப்பட்டன. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் இன்று காலை காங்கிரசார் சுமார் 500–க்கும் மேற்பட்டோர் அந்த இடம் அருகே திரண்டனர்.
சிலையை உடைந்தவர்களை கைது செய்யக்கோரி அவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிலர் சாலையில் படுத்து மறியல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லாமல் சீமானை கைது செய்கக் கோரி கோஷமிட்டு சாலையில் அமர்ந்தனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். சக்திவேல், ஜோதி, ரங்கபாஷ்யம், ராயபுரம் மனோ, சுரேஷ் பாபு, சூளை ராஜேந்தர், கொண்டல் தாசன், மணிபால், அகரம் கோபி, மகளிர் அணி அபி உள்பட 500–க்கும் மேற்பட்டோர் கைதானார்கள்.

வாஜ்பாயின் மருமகள் காங்கிரசில் இணைந்தார்

புதுடெல்லி, பிப். 27-

சத்தீஸ்கர் மாநிலம் ஜஞ்ச்கீர் தொகுதி பா.ஜனதா எம்.பி. கருணா சுக்லா (63). முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மருமகளான இவர், சத்தீஸ்கர் பா.ஜனதா மகளிரணி துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார்.

கடந்த ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக கட்சியில் இருந்து திடீரென விலகிய கருணா சுக்லா, தன்னை கட்சியின் மூத்த தலைவர்கள் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டினார். எதையும் ஆலோசிக்காமல் தனது கட்சிப்பதவிகளை பறித்ததால் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், கருணா சுக்லா இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சி மக்களுக்காகப் பணியாற்றும் ஜனநாயக கட்சி என்பதால் அக்கட்சியில் இணைய முடிவெடுத்ததாக கருணா சுக்லா கூறியுள்ளார். வாஜ்பாய்க்குப் பிறகு பா.ஜனதா கட்சியின் நடவடிக்கைகளுக்கும், பேச்சுக்கும் இடையே ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்தன.

காங்கிரஸ் கட்சிக்கு நான் வலிமை சேர்த்து, மக்களவைத் தேர்தலில் காங்கிரசை வெற்றி பெறச் செய்வேன் என்றும் அவர் தெரிவித்தார்.

Sunday, 23 February 2014

தமிழன் தலை நிமிர்ந்து நிற்கும் முடிவு : பாரதிராஜா பேச்சு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேருக்கும் தூக்குத்தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. மேலும் கோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில் அவர்கள் 3 பேர் மட்டுமின்றி இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்பட மேலும் 4 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார்.
ஆனால், மத்திய அரசின் எதிர் நடவடிக்கை காரணமாக, அவர்களுடைய விடுதலை தாமதமாகி வருகிறது. இந்த நிலையில், ஜெயலலிதாவின் விடுதலை நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரையுலகம் சார்பில், சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் டைரக்டர் பாரதிராஜா தலைமையில் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் டைரக்டர் பாரதிராஜா பேசியபோது,   ‘’உலக நாடுகள் அனைத்தும் தூக்குத்தண்டனையை எதிர்க்கும் சூழ்நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சதாசிவம் மிக சரியான தீர்ப்பை சொல்லி இருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வது மாநில அரசின் முடிவு என்று அவர் தீர்ப்பு கூறியதும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தாய்மை உணர்வுடன் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேர் உள்பட சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
இதற்காக உலக தமிழர்கள் அத்தனைபேரும், கண்ணீரால் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மறப்பதும், மன்னிப்பதும் மனித மாண்பு. முதல் முறையாக தமிழன் தலை நிமிர்ந்து நிற்பதற்கான ஒரு முடிவை முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்திருக்கிறார். இதற்காக ஒட்டு மொத்த தமிழர்களும் அவருக்கு உறுதுணையாக நிற்பார்கள்’’என்று பேசினார்.

நடிகர் சத்யராஜ் பேசும்போது, ‘‘தலைமை பதவியில் இருப்பவர்கள் வீரமும், விவேகமும் உள்ளவராக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அந்த வீரமும் விவேகமும், தமிழக முதலமைச்சர் ஜெயலலி தாவுக்கு இருக்கிறது. இதற்காக தமிழ் திரையுலகம் முழு மூச்சாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நிற்கும்’’ என்றார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார் பேசும்போது, ‘‘சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில், மனித நேயத்துடன் முடிவெடுத்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி. இதில் அரசியல் கிடையாது. எனவே தமிழ் திரையுலகை சார்ந்த நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நமது முதல்–அமைச்சருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் சிறப்பாக நடைபெற்றது

சென்னை .23.2.2014
தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்  சிறப்பாக  நடைபெற்றது .இதில் 5 வயது   வரை உள்ள குழந்தைகளுக்கு ,2 ம் கட்டமாக
தமிழகம் முழுவதும் ஐந்த வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்கள் என தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 சொட்டு மருந்து மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
முதற்கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 19-ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படவுள்ளது.
புதியதாக பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாள்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். சொட்டு மருந்து வழங்கப்பட்டதன் அடையாளமாக குழந்தைகளுக்கு விரலில் மை வைக்கப்படும். சொட்டு மருந்து கொடுக்கப்படாமல் விடுபட்ட குழந்தைகளைக் கண்டறிவதற்காக விரலில் மை வைக்கப்படுகிறது.
காலை 7 மணி முதல்...: சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாள்களுக்கு முன்பு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நாள்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
பயணம் மேற்கொள்பவர்களுக்கு...: முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் மொத்தம் 1652 நகரும் மையங்கள் நிறுவப்பட் டுள்ளன. தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தை களுக்கென்று 1000 நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முகாமில் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், ரோட்டரி இன்டர்நேஷனல் போன்ற தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்படுகின்றனர். .

மரணமடைந்த 10 போலீசார் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்: ஜெயலலிதா

சென்னை, பிப். 27–
முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சர்புதின் 31.1.2014 அன்று கோணேரிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பிச்சைகனி 31.1.2014 அன்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியையும்,
சேலம் மாவட்டம், ஆத்தூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ரமேஷ் 1.2.2014 அன்று கொத்தாம்பாடி அருகே, சேலம் - ஆத்தூர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
திருச்சிராப்பள்ளி மாநகரம், திருச்சிராப்பள்ளி அரசு பொது மருத்துவமனை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பங்கிராஜ் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 2.2.2014 அன்று காலமானார் என்ற செய்தியையும்,
ராமநாதபுரம் மாவட்டம், ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணி புரிந்து வந்த சத்தியேந்திரன் 3.2.2014 அன்று திருஉத்திர கோசமங்கை அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
திருச்சிராப்பள்ளி மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூடத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த பூவேந்திரன் 5.2.2014 அன்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியையும்,
நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் மேற்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பத்மநாபன் 6.2.2014 அன்று உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியையும்,
ஈரோடு மாவட்டம், அறச்சலூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சுந்தரம் 7.2.2014 அன்று அறச்சலூர், அவல்பூந்துறை - வெள்ளவேடு சாலை அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
ஈரோடு மாவட்டம், சென்னிமலை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த யுவராசு 8.2.2014 அன்று காங்கயம் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
சேலம் மாவட்டம், பனை மரத்துப்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சந்திரன் 11.2.2014 அன்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
காவல் துறை ஆய்வாளர் சர்புதின்; சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பிச்சைகனி, பங்கிராஜ், பத்மநாபன், சந்திரன், தலைமைக் காவலர்கள் ரமேஷ், பூவேந்திரன், சுந்தரம், யுவராசு, காவலர் சத்தியேந்திரன், ஆகியோரின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் மறைந்த காவலர்களின் குடும்பங்களுக்கு முதல்– அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

சென்னையில் இந்து முன்னணி அலுவலகத்துக்கு மிரட்டல் கடிதம்: 27 தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக தகவல்

சென்னை, பிப்.23- 

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி மாநில தலைமை அலுவலகத்துக்கு நேற்று ஒரு கடிதம் வந்தது. 

முகவரி இல்லாமல் வந்த அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது;- 

எனது பெயர் பாஷா சில தீவிரவாத அமைப்புகளால் பயிற்சி பெற்று மூளைச்சலவை செய்யப்பட்டு வாழ்கையை தொலைத்தவன். வெள்ளையன், ரமேஷ் கொலையில் சிறையில் உள்ள நபர்களை விடுதலை செய்ய மேலும் 9 இந்து அமைப்பு தலைவர்களை கடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் சுமார் 27 பயங்கரவாதிகள் சென்னை, தாம்பரம், திருவள்ளூர் போன்ற இடங்களில் தங்கி உள்ளனர். 

இந்த பகுதியில் உள்ள இந்து இயக்க தலைவர்களை கடத்தி கொலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. நான் இன்று திருந்தி வாழ ஆசைப்படுகிறேன். இந்த கடிதத்தை நீங்கள் தயவு செய்து அலட்சியப்படுத்த வேண்டாம். வரும் மார்ச் 19-ந்தேதிக்குள் இவர்களை முடிக்க முடிவு செய்துள்ளனர். குறிப்பாக தாம்பரத்தில் உள்ள தலைவரை பின் தொடர மட்டும் 5 பேர் அங்கு தங்கி உள்ளனர். 

இன்று இந்த கடிதம் உங்களுக்கு சாதாரணமாக தெரியலாம். நான் வாழ விரும்புவதால் இதை கடிதம் மூலம் தெரிவிக்கிறேன். இஸ்மாயில், பக்ரூதின், மாலிக் ஆகியோர்களை சென்னையில் சில இடங்களில் தங்க வைக்கவும் திட்டம் உள்ளது. சொல்ல நினைத்ததை தெரிவித்துவிட்டேன். நீங்கள் நம்பபோறது இல்லை. நடக்க போவது இதுதான். சென்னை புறநகரில் உள்ள பகுதியில்தான் இவர்களை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். இவ்வாறு கடித்ததில் கூறப்பட்டிருக்கிறது. 

கடிதம் தொடர்பாக இந்து முன்னணி சென்னை மாநகர பொதுச்செயலாளர் இளங்கோவன் தலைமையில் நிர்வாகிகள் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ்நிலையத்திலும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் டி.ஜி.பி. அலுவலகத்திலும் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் இந்து அமைப்பு தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது தொடர்பாகவும், மர்ம கடிதம் தொடர்பாகவும் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

பெரம்பூரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து வளையல் வியாபாரி படுகாயம்

பெரம்பூர், பிப். 23–பெரம்பூரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து வளையல் வியாபாரி படுகாயம்
பெரம்பூர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 39) வளையல் வியாபாரி. இவருக்கு ராதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
சம்பவத்தன்று கன்னியப்பன் வியாபாரத்துக்கு சென்றுவிட்டார். மனைவி ராதா குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று கன்னியப்பன் வியாபாரம் முடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். வீட்டில் சமையல் கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டிருந்தது. இதை அறியாமல் கன்னியப்பன் மின் விளக்கை போட்டார். 
அப்போது, சிலிண்டர் ‘டமார்’ என்ற பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்தது. தீயில் சிக்கி கன்னியப்பன் படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து செம்பியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உக்ரபாண்டியன் விசாரணை நடத்தி வருகிறார்.

ஜெயலலிதா பிறந்த நாள் மாரத்தான் போட்டி: வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு தங்க காசு பரிசு

சென்னை, பிப். 23–ஜெயலலிதா பிறந்த நாள் மாரத்தான் போட்டி: வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு தங்க காசு பரிசு
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் 66–வது பிறந்த நாளையொட்டி, வடசென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாரத்தான் ஒட்டப்பந்தயம் இன்று நடந்தது.
சென்னை மெரீனா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே இந்த மாரத்தான் போட்டி நடந்தது. இதில், ராயபுரம், திரு.வி.க.நகர், எழும்பூர் தொகுதிகளில் உள்ள பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரம் மாணவ – மாணவிகள் பங்கேற்றனர். போட்டிக்கு வடசென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பாலகங்கா எம்.பி. தலைமை தாங்கினார்.
அமைச்சர்கள் வளர்மதி, மாதவரம் மூர்த்தி, சின்னையா, மேயர் சைதை துரைசாமி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். உழைப்பாளர் சிலையில் இருந்து கலங்கரை விளக்கம் வரை இந்த போட்டி நடந்தது.
போட்டியில் வெற்றிபெற்ற மாணவ–மாணவிகளுக்கு தங்ககாசு, ரொக்கப் பரிசு, சான்றிதழ்கள் ஆகியவை வழங்கப்பட்டன. முதல் பரிசு பெற்ற மாணவி மெரிசா, மாணவர் காலேஷ் ஆகியோருக்கு தலா 8 கிராம் தங்கக்காசு பரிசாக வழங்கப்பட்டது.
2–வது இடம் பிடித்த மாணவி கோமதி, மாணவர் சரத்குமார் ஆகியோர் தலா 6 கிராம் தங்க நாணயமும், 3–வது இடம் பிடித்த மாணவ, மாணவிகள் பிரியா, பாலாஜி ஆகியோருக்கு 4 கிராம் தங்க நாணமும் பரிசாக கிடைத்தது.
முதல் 10 இடங்களை பிடித்த 7 மாணவர் மற்றும் 7 மாணவிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. இதில் பங்கேற்ற 3 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கும் ‘ஹாட் பாக்ஸ்’ மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவற்றை அமைச்சர்கள் மற்றும் மேயர் வழங்கினார்கள்.
இந்த பந்தயத்தை மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், உறவினர்கள் நேரில் கண்டு மகிழ்ந்தனர்.
பரிசு பெற்ற மாணவ, மாணவிகள் முதல்– அமைச்சர் ஜெயலலிதாவுக்கும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும் பாராட்டு தெரிவித்தனர். 

கூட்டணி இழுபறி: பா.ஜனதா–காங்கிரசை அலைக்கழிக்கும் விஜயகாந்த்

சென்னை, பிப்.23–கூட்டணி இழுபறி: பா.ஜனதா–காங்கிரசை அலைக்கழிக்கும் விஜயகாந்த்
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி அமைப்பதில் தமிழகஅரசியல் கட்சிகள் படாதபாடுபடுகிறது. தேசிய கட்சிகளான காங்கிரசும், பா.ஜனதாவும் வலுவான கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. கூட்டணியில் இருந்து விலகிய தி.மு.க.வுடன் மீண்டும் உறவை புதுப்பிக்க காங்கிரஸ் பல வழிகளில் முயற்சித்தும் பலன் இல்லை. காங்கிரஸ் கூட்டணி வேண்டாம் என்பதில் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
தி.மு.க. பக்கம் கூட்டணி கதவுகள் மூடப்பட்டு விட்டதால் தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டது. விஜயகாந்துடன் நெருங்கிய நட்பு வைத்திருக்கும் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் நேரில் சந்தித்து விஜயகாந்தை காங்கிரஸ் கூட்டணிக்கு அழைத்தார்.
இதற்கிடையில் விஜயகாந்தை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜனதாவும், தி.மு.க.வும் பகீரத முயற்சிகள் மேற்கொண்டன. மவுசு அதிகரித்ததால் விஜயகாந்தின் பேரமும் அதிகரித்தது. இதனால் தி.மு.க. தரப்பில் வந்தால் பார்க்கலாம் என்று விட்டு விட்டனர்.
பா.ஜனதாவும், காங்கிரசும் விஜயகாந்தை இழுக்க மல்லு கட்டுகின்றன. இதை பார்த்த விஜயகாந்தும் இரு கட்சிகளுக்கும் போக்கு காட்டி வருகிறார்.
விஜயகாந்த் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து திரும்பிய பிறகு டெல்லி தலைவர்கள் விஜயகாந்துடன் தொடர்பில் இருக்கிறார்கள். காங்கிரஸ் மூத்த தலைவர் அகமதுபடேல் கூட்டணி பேரத்தை பேசி வருவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே தே.மு.தி.க. தங்கள் பக்கம் வரும் என்ற நம்பிக்கையில் காங்கிரசார் உள்ளனர்.
அதே நேரத்தில் பா.ஜனதாவுடனும், விஜயகாந்த் பேசி வருகிறார். 16 தொகுதிகள் கேட்டதற்கு 12 தொகுதிகள் வரை கொடுப்பதற்கு பா.ஜனதா தரப்பிலும் சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று கூட்டணி உறுதியாகி விடும் என்று பா.ஜனதா வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. இறுதிக்கட்ட பேச்சு வார்த்தையில் பா–ஜனதா தலைவர்களும், தே.மு.தி.க. தலைவர்களும் ஈடுபட்டனர். திடீரென்று விஜயகாந்த் தரப்பில் 18 சீட் வேண்டும் என்று கோரப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் சிக்கல் எழுந்தது.
ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்வதுபோல் விஜயகாந்த் போடும் அரசியல் நாடகம் இரு தேசிய கட்சிகளையும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.
பா.ஜனதா தலைவர்களிடம் உங்களோடுதான் கூட்டணி என்று கூறி இருக்கிறார். காங்கிரஸ் தலைவர்களிடமும் கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் எந்த பக்கம் செல்வார்? என்று தெரியாமல் பா.ஜனதாவும் காங்கிரசும் தவிக்கின்றன.
பா.ஜனதாவின் முதல் வேட்பாளர் பட்டியல் வருகிற 27–ந்தேதி வெளியாகிறது. பல மாநிலங்களில் கூட்டணி முடிவு செய்யப்பட்டு வேட்பாளர் பட்டியலும் தயாராகி விட்டது. தமிழ் நாட்டிலும் விரைவாக கூட்டணியை உறுதி செய்யும்படி நரேந்திரமோடி மாநில தலைமையை கேட்டுக் கொண்டுள்ளார்.
எனவே 27–ந்தேதிக்குள் கூட்டணியை உறுதி செய்ய பா.ஜனதா தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் விஜயகாந்த் இன்று திடீரென்று சிங்கப்பூர் புறப் பட்டு சென்றார். எப்போது திரும்புவார் என்று தெரிய வில்லை. சிங்கப்பூரிலும் கூட்டணி குறித்து ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டணி பேச்சுவார்த்தை பற்றி பா.ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
பாரதீய ஜனதா கூட்டணி குறித்து இன்னும் இறுதி முடிவு செய்யப்பட வில்லை. தே.மு.தி.க., பா.ம.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு ஏற்படும் என்று நம்புகிறோம்.
பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட பிறகு தான் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து முடிவு செய்யப்படும். பாரதீய ஜனதா எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பதும் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு பிறகே முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில் விஜயகாந்தை தி.மு.க. கூட்டணிக்கு இழுக்கும் இறுதிக்கட்ட முயற்சியும் நடக்கிறது. அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் சந்தானம் நேற்று விஜயகாந்தை சந்தித்து பேசி இருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் இதற்கான முயற்சியில் இறங்கி உள்ளார்.

திருவள்ளூரில் சோனியா உருவபொம்மை எரிப்பு: 50 பேர் கைது

சென்னை, பிப். 23–
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழக முதல்–அமைச்சர் சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
தமிழகம் முழுவதும் அனைத்து கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் இந்த தீர்மானத்திற்கு வரவேற்பு தெரிவித்து வந்த நிலையில் காங்கிரஸ் கட்சியினர் 7 பேரின் விடுதலையை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதை கண்டிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியினர் திருவள்ளூரில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்தனர். அப்போது போலீசார் அதை தடுக்க முயன்றனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
தொடர்ந்து சோனியா காந்தியின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தி கண்டன முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூரில் சோனியா உருவபொம்மை எரிப்பு: 50 பேர் கைது

கீழ்ப்பாக்கம் – திருவல்லிக்கேணியில் ஆட்டோவில் பயணிகளிடம் துணிகர கொள்ளை

சென்னை, பிப். 23–
சென்னையில் அதிகாலையில் ஆட்டோவில் பயணம் செய்யும் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி டிரைவர்களே வழிப்பறியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதுபற்றிய விவரம் வருமாறு:–
டெல்லியில் ரெயில்வே ஊழியராக பணியாற்றி வரும் சுந்தர் நேற்று காலையில் சென்னை வந்தார். நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கர நேத்யாலயா ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இவர் ஆட்டோவில் புறப்பட்டார்.
மன்றோ சிலை அருகில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவர் ஓரமாக ஆட்டோவை நிறுத்தினார். பின்னர் சுந்தரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த ரூ. 35 ஆயிரம் பணம், செல்போன், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பினார்.
இதேபோல கீழ்ப்பாக்கத்திலும் தொழில் அதிபர் ஒருவரிடமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கீழ்ப்பாக்கம் ராஜரத்தினம் தெருவைச் சேர்ந்தவர் ஆதித்யா. தொழில் அதிபரான இவர், பெங்களூர் செல்வதற்காக நேற்று அதிகாலை வீட்டில் இருந்து புறப்பட்டார். அருகில் உள்ள பர்ணபி சாலையில் வைத்து, சென்ட்ரல் செல்வதற்காக இவர் ஆட்டோவில் ஏறினார். அப்போது அந்த ஆட்டோவில் வாலிபர் ஒருவரும் அமர்ந்திருந்தார். சிறிது தூரம் சென்றதும் இருட்டான பகுதியில் டிரைவர் ஆட்டோவை நிறுத்தினார். பின்னர் ஆட்டோவில் இருந்த வாலிபருடன் சேர்ந்து டிரைவர் கத்தியை காட்டி மிரட்டி, ஆதித்யாவிடம் இருந்த ரூ. 35 ஆயிரம் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை பறித்து விட்டு தப்பினர்.
கீழ்ப்பாக்கம் பகுதியில் இதேபோன்று ஏற்கனவே 2 முறை ஆட்டோவில் சவாரி சென்ற பயணிகளிடம் டிரைவர்களே வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். திருவல்லிக்கேணியில் நேற்று நடை பெற்ற சம்பவம் 4–வது சம்பவமாகும்.
இதற்கிடையே திருவல்லிக்கேணியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் துப்பு துலங்கியுள்ளது. ஆட்டோ நம்பரை வைத்து துப்பு துலக்கிய போலீசார், ராயபுரத்தை சேர்ந்த சுப்ரமணி (42) என்ற ஆட்டோ டிரைவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம்: அன்புமணி ராமதாஸ் பேச்சு

கடலூர், பிப்.23–
பா.ம.க. சார்பில் இளைஞர்கள் எழுச்சி மாநாடு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்றது. மாநாட்டுக்கு கடலூர் பாராளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார்.
மாநாட்டில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:–
பண்ருட்டி என்றால் பலாப்பழமும், முந்திரிக் கொட்டையும் தான் நினைவுக்கு வரும். பலாப்பழத்தின் வெளியில் முட்கள் இருக்கும் உள்ளே இனிப்பான சுளைகள் இருக்கும். டாக்டர் ராமதாஸ் பலாப்பழம் போன்றவர். சாதாரணமாக பழத்துக்குத்தான் கொட்டைகள் இருக்கும். ஆனால் முந்திரிக் கொட்டைகள் மட்டும் பழத்துக்கு வெளியே இருக்கும். 
பண்ருட்டியில் 2 முந்திரிக் கொட்டைகள் இருக்கிறது. அந்த 2 முந்திரிக் கொட்டைகளும் அ.தி.மு.க.விடம் சரண் அடைந்துவிட்டன. முதல்– அமைச்சராக இருப்பவர் மாவட்டம் தோறும் சென்று மக்கள் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் அப்படி நடக்கிறதா? 4 அதிகாரிகள்தான் தமிழகத்தை நிர்வகித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுமக்கள் தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் வெறுக்கிறார்கள். இந்த கட்சிகளுக்கு மாற்றாக பா.ம.க.வை மக்கள் விரும்புகிறார்கள். ஏனெனில் பா.ம.க. வித்தியாசமான கொள்கைகளை கொண்ட கட்சி. தமிழகத்தை ஆட்சி செய்ய எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம். கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை இலவசமாக தருவோம். திராவிட கட்சிகள் தமிழகத்துக்கு துரோகம் செய்த கட்சிகள்.
பா.ம.க. தலித்களுக்கு எதிரி கிடையாது. ஆனால் தலித் என்கிற போர்வையில் ஒரு கும்பல் பெண்களை கடத்தி கட்டப்பஞ்சாயத்து செய்கிறது. காதல் நாடகத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது இந்த கடலூர் மாவட்டம் தான். இன்று எல்லா சமுதாயத்தினரும் நம்முடன் இருக்கிறார்கள். எல்லா சமுதாயத்துக்கும் டாக்டர் ராமதாஸ் தான் பாதுகாப்பு. எல்லா சமுதாயத்து பெண்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்றால் அனைவரும் பா.ம.க.வின் பக்கம் வரவேண்டும்.
ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வதாக அறிவித்தது அரசியல் நாடகம். நளினி உடல்நலமில்லாத தன் தந்தையை பார்த்து வருவதற்காக பரோலில் செல்ல அனுமதி கேட்டபோது மறுத்தது தமிழக அரசு. ஆனால் அரசியல் காரணங்களுக்காக நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்வதாக ஆளும்கட்சி அறிவித்துள்ளது. 
ராஜீவ் கொலையாளிகளை வைத்து தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அரசியல் செய்கின்றன. நாம் மட்டும் தான் இலங்கை பிரச்சினையில் அரசியல் செய்யவில்லை. எனவே இதையெல்லாம் மனதில் வைத்து நம் வெற்றி வேட்பாளர் கோவிந்தசாமியை 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

காமராஜருடன் மந்திரியாக இருந்த முன்னாள் அமைச்சர் பூவராகவன் மரணம்

பண்ருட்டி, பிப்.23–
காமராஜர் ஆட்சியில் செய்தி மற்றும் மீன்வளத் துறை அமைச்சராக இருந்தவர் பூவராகவன். இவர் 1962–ம் ஆண்டில் இருந்து 1967–ம் ஆண்டு வரை மந்திரியாக இருந்தார். காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக பணியாற்றி வந்தார். சமீபத்தில் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இன்று அதிகாலை அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் திடீரென்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86.
அவர் மரணமடைந்த தகவல் அறிந்ததும் முக்கிய பிரமுகர்கள் பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
மறைந்த பூவராகவன் எனது இனிய நண்பர். எனக்கு பள்ளி தோழர், பெருந்தலைவர் காமராஜருக்கு மிகவும் நம்பிக்கையானவர். ஏழைகளுக்காக அதிகம் பாடுபட்டவர். அவரது மறைவு பேரிழப்பாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மரணமடைந்த பூவராகவனுக்கு சொந்த ஊர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் இருப்பு கிராமம். இவர் 1962–ம் ஆண்டு விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். பின்னர் அவர் கடலூர் மற்றும் மேட்டூர் பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு 2 முறை எம்.பி.யாக இருந்தார். காங்கிரஸ் கட்சியில் மாநில துணை தலைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு 4 மகள்கள் உள்ளனர்.

சவூதி இளவரசர் 26-ம் தேதி இந்தியா வருகை

புதுடெல்லி, பிப்.23- 

சவூதி அரேபியா நாட்டின் இளவரசர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் 3 நாள் பயணமாக வரும் 26-ம் தேதி இந்தியா வருகிறார். 

சமீபத்தில் சவூதி அரேபியா நாட்டுக்கு சென்றிருந்த இந்திய துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, அந்நாட்டின் பட்டத்து இளவரசரை சந்தித்த போது இந்தியாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். 

அவரது அழைப்பை ஏற்று சவுதியின் துணை பிரதமராகவும், ராணுவ அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் இளவரசர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் வரும் புதன்கிழமை இந்தியா வருகிறார். 

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி ஆகியோரை சந்தித்து இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ள இளவரசருடன் சவூதியின் மந்திரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பிரபல தொழிலதிபர்களும் வருகின்றனர். 

கடந்த 2010-ம் ஆண்டு ரியாத் மாகாண கவர்னராக பதவி வகித்த போது இந்தியா வந்திருந்த இவர் தற்போது இரண்டாவது முறையாக டெல்லி வருகிறார். வரும் 28-ம் தேதி வரை இங்கு தங்கியிருப்பார் என மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இந்தியா- சவூதி அரேபியாவுக்கிடையில் கடந்த ஆண்டில் மட்டும் 43 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இருதரப்பு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இந்தியாவுக்கு தேவையான பெட்ரோலிய கச்சா எண்ணையின் பெரும்பகுதி சவூதி அரேபியாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. சுமார் 30 லட்சம் இந்தியர்கள் சவூதியில் வேலை செய்து வருகின்றனர் என்பது நினைவிருக்கலாம். 

சவூதி மன்னரான அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் கடந்த 2006-ம் ஆண்டு புது டெல்லியில் நடைபெற்ற இந்திய குடியரசு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Tuesday, 18 February 2014

தமிழகத்தில் ஓட்டுனர் உரிமம் தேர்வை கேமரா மூலம் கண்காணிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு

சட்டசபையில் இன்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெறும் ஓட்டுனர் உரிமம் வழங்கும் தேர்வை கண்காணிப்பு கேமரா மூலம் கவனித்து உரிமம் வழங்க அரசு ஆவண செய்யுமா? என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ் கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அளித்த பதில் வருமாறு:– திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், திண்டுக்கல், திருச்சி, கோவை உள்பட 14 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுனர் உரிமம் பெறுவோர்களுக்கு தேர்வு நடத்துவதை கேமரா மூலம் கண்காணித்து அதை கம்ப்யூட்டரில் பதிவு செய்து நவீன தொழில்நுட்பத்தின்படி அவர்களுக்கு உரிமம் வழங்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்கு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
இந்த தேர்வில் பங்கேற்பவர்களுக்கு அவர்கள் எப்படி ஓட்டினார்கள் என்பதை சி.டி. ஆக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.                                                                                                                             முதல்–அமைச்சர் எடுத்த பல்வேறு நடவடிக்கை காரணமாக தமிழ்நாட்டில் விபத்து விகிதம் குறைந்துள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்தமிழகத்தில் ஓட்டுனர் உரிமம் தேர்வை கேமரா மூலம் கண்காணிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு

5 நாட்கள் சஸ்பெண்டு: துரைமுருகன் தண்டனையை ரத்து செய்ய சட்டசபையில் தே.மு.தி.க. வலியுறுத்தல்

சென்னை, பிப். 18–
சட்டசபையில் இன்று தே.மு.தி.க. கொறடா சந்திரகுமார் பேசும்போது, தி.மு.க. உறுப்பினர் துரைமுருகன் 5 நாட்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டதை குறிப்பிட்டு பேசிய அவர், துரைமுருகனுக்கு அளித்த தண்டனையை ரத்து செய்யுமாறு வலியுறுத்தினார்.
பின்னர் பட்ஜெட் மீதான விவாதத்தில் சந்திரகுமார் பேசும்போது, ‘‘அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விசுவநாதன் ஆகியோர் விரிவாக பதில் அளித்தனர்.
அப்போது சந்திரகுமாருக்கும் அமைச்சர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கே.பி.முனுசாமி குறிப்பிடும் போது, ‘‘உங்களுக்காக வெயில், மழை என்று பாராமல் முதல்–அமைச்சர் புரட்சித்தலைவி கடுமையாக பிரசாரம் செய்ததால்தான் நீங்கள் ஜெயித்து இங்கே வந்திருக்கிறீர்கள். எனவே உணர்ச்சி வசப்படாதீர்கள். உங்கள் தலைவரைப் போல நீங்களும் உணர்ச்சிவசப்படுகிறீர்களே.                                                                     அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேர்ந்ததால்தான் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதாக கூறுகிறீர்களே.5 நாட்கள் சஸ்பெண்டு: துரைமுருகன் தண்டனையை ரத்து செய்ய சட்டசபையில் தே.மு.தி.க. வலியுறுத்தல்
அதற்கு பிறகு நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் ஜெயித்தது. அ.தி.மு.க.தான். 1 லட்சத்து 19 ஆயிரம் பதவிகளில் 95 சதவீத இடங்களில் அ.தி.மு.க.தான் வெற்றி பெற்றுள்ளது. எனவே இது புரட்சித்தலைவிக்கு கிடைத்த வெற்றி. உங்களுக்கு கிடைத்த வெற்றி அல்ல என்றார்.
சந்திரகுமார்:– தே.மு.தி.க. வேட்பாளர்கள் நின்ற ஒரு தொகுதியில் கூட முதல்–அமைச்சர் பிரசாரம் செய்யவில்லை.
அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்:– 2011 தேர்தலின் போது மாவட்டத்தில் ஒரு இடத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் எல்லா வேட்பாளர்களையும் வரவழைத்து அறிமுகப்படுத்திதான் முதல்–அமைச்சர் ஓட்டு கேட்டார். நீங்களும் வந்தீர்கள். மற்ற வேட்பாளர்களும் வந்தார்கள். உங்கள் சின்னத்தையும் சொல்லித்தான் ஓட்டு கேட்டார். அந்த தேர்தலில் தமிழக மக்களை பார்த்து புரட்சித் தலைவிதான் முதல்–அமைச்சராக வேண்டும் என்று வாக்கு கேட்டோம்.
தனிப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்திற்காகவோ, சந்திரகுமாருக்காகவோ மக்கள் வாக்களிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் நான் நின்றாலும் ஜெயிக்க முடியாது. சந்திரகுமாராலும் முடியாது. தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர புரட்சித் தலைவியால்தான் முடியும் என்ற நம்பிக்கையில் தமிழக மக்கள் புரட்சித் தலைவிக்காக வாக்களித்தார்கள்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை மருத்துவமனையாக்க எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை, பிப். 18–
சென்னை ஓமாந்தூரார் அரசினர் தோட்டத்தில் தி.மு.க. ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றி தமிழக அரசு புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை மருத்துவமனையாக்க எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு
 உத்தரவிட்டது. இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்பாயத்தில் வக்கீல் வீரமணி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் வீரமணி அப்பீல் செய்தார். இந்த அப்பீல் மனு நீதிபதிகள் பால்வசந்த்குமார், தேவதாஸ் ஆகியோர் முன்னிலையில் இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.