Wednesday, 4 March 2015

திருமாவளவன் தலைமையில் மத நல்லிணக்க கருத்தரங்கம்: இன்று மாலை நடக்கிறது

சென்னை, மார்ச். 4–
விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆகியவை ஒருங்கிணைக்கும் மத நல்லிணக்க கருத்தரங்கம் வேப்பேரி பெரியார் திடலில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.
கருத்தரங்கிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தலைமை தாங்குகிறார். எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் தெகலான் பாகவி தொடக்க உரை நிகழ்த்துகிறார்.
இதில் தமிழக ஆயர் பேரவை தலைவர் பேராயர் சின்னப்பா, இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு முகம்மது அனிபா, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ், வெல்பேர் பார்ட்டி தலைவர் எஸ்.என்.சிக்கந்தர்.
ஐ.என்.டி.ஜே. தலைவர் எஸ்.எம்.பாக்கர், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் உமர் பாரூக், தர்வேஷ் ரஷாதி, வக்கீல் முத்து கிருஷ்ணன், மன்சூர் காஷிபி ஆகியோர் முன்னிலை வகிக்கினறனர்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைவர் முகம்மது இஸ்மாயில், திராவிடர் விடுதலை கழகம் பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் மீ.த.பாண்டியன், மே பதினேழு இயக்க தலைவர் திருமுருகன் ஆசிரியர் கருத்துரை வழங்குகின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், பீட்டர் அல்போன்ஸ், பேராயர் எஸ்றா சற்குணம், சுப.வீரபாண்டியன், தியாகு, கொற்றவை மூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றகிறார்கள்.
முன்னதாக அப்துல் அமீது வரவேற்கிறார். முடிவில் இளஞ்சேகுவேரா நன்றி கூறுகிறார்திருமாவளவன் தலைமையில் மத நல்லிணக்க கருத்தரங்கம்: இன்று மாலை நடக்கிறது

No comments:

Post a Comment