நெல்லை, மார்ச் 28–
பாளையில் நடைபெற்ற வியாபாரிகள் சங்க நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
காவிரி பிரச்சனையில் கர்நாடக அரசு நடுவர்மன்ற தீர்ப்பை மதிக்கவில்லை. அண்டை மாநிலங்கள் இவ்வாறு செயல்பட்டால் ஒருமைப்பாடு சீர்குலையும். நாட்டில் 70 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பியுள்ளனர்.
எல்லா துறைகளிலும் அந்நிய ஆதிக்கத்தை மத்திய அரசு புகுத்தி வருகிறது. அண்டை மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனையை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது. காவிரி பிரச்சனை விவசாயிகள் பிரச்சனை மட்டுமல்ல. மக்களின் வாழ்வாதாரம், குடிநீர் பிரச்சனையும்கூட. கர்நாடக அரசு திருந்தவில்லையென்றால் அந்த அரசை கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக எங்கள் போராட்டம் தீவிரமடையும்.
மே 5–ந்தேதி தஞ்சாவூரில் எங்கள் சங்கத்தின் மாநாடு நடக்கிறது. அதில் போராட்டம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment