கோவை, மார்ச் 28–
திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் ஜிம் ஆறுமுகம் (வயது 50) ரியல் எஸ்டேட் தொழிலதிபர். இவருக்கும் கோவை மாநகராட்சி 1–வது வார்டு பா.ஜனதா கவுன்சிலருமான வத்சலாவின் கணவர் வரதராஜூவுக்கும் தொழில்போட்டி ஏற்பட்டு தகராறு இருந்து வந்தது.
அது பற்றி பேச வரதராஜன் வீட்டுக்கு ஆறுமுகம் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆறுமுகம் வரதராஜின் மனைவியான வத்சலாவிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறுப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வரதராஜ், வத்சலா, உதவியாளர் இளங்கோ ஆகியோர் ஆறுமுகத்தை தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த துடியலூர் போலீசார் இளங்கோவனை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் ஆட்டோ குமார், செந்தில் என்ற செந்தில்குமார், கனகு என்ற கனகராஜ் ஆகியோர் ஆறுமுகத்தை தாக்கியதாக தெரியவந்தது.
இந்நிலையில் துடியலூர் போலீசில் மணிகண்டன் என்பவரும் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி சரணடைந்தார். இதனிடையே கவுன்சிலர் வத்சலா, செந்தில்குமார், கனகராஜ் ஆகியோரை கணபதி பஸ் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கவுன்சிலரின் கணவர் வரதராஜ், ஆட்டோ குமார் ஆகியோரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். கைதானவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில்
பெண் கவுன்சிலர் வத்சலாவிடம் ரியல் எஸ்டேட் அதிபர் தவறாக நடக்க முயன்றபோது கொலை செய்தோம் என்று கூறினர்.
No comments:
Post a Comment