கோயம்பேடு, மார்ச்.23–
கோயம்பேடு நெற்குன்றம் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் ஜெயராமன் (37). காய்கறி வியாபாரி. இவரது தம்பி ராஜபாண்டியன். 2 பேரும் கடந்த 15–ந்தேதி மது போதையில் மோதிக் கொண்டனர். அப்போது ராஜபாண்டியன் கத்தியால் ஜெயராமனை குத்தினார். உடனே ஜெயராமனை சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜபாண்டியை கைது செய்தனர். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் ஜெயராமன் இறந்தார். இதைத் தொடர்ந்து கோயம்பேடு போலீசார் ராஜபாண்டியன் மீது ஏற்கனவே பதிவு செய்த கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றினர்.
No comments:
Post a Comment