Wednesday, 11 March 2015

தமிழக மீனவர்கள் 86 பேரை விடுவிக்க இலங்கை அதிபர் சிறிசேனா உத்தரவு

கொழும்பு, மார்ச் 11- 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்வதையொட்டி, நல்லெண்ண அடிப்படையில் இலங்கை சிறையில் உள்ள 86 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். இத்தகவலை இலங்கை அதிபரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

வரும் வெள்ளிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி இலங்கை தலைநகர் கொழும்பு செல்கிறார். அங்கிருந்து அனுராதபுரம், தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு செல்கிறார். 1987 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிறகு இப்போதுதான் இந்திய பிரதமர் ஒருவர் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 

கடந்த ஆண்டு மே மாதம் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இந்தியா வந்த இலங்கை அதிபர் ரஜபக்சே தனது வருகைக்கு முன் நல்லெண்ண அடிப்படையில் இந்திய மீனவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.தமிழக மீனவர்கள் 86 பேரை விடுவிக்க இலங்கை அதிபர் சிறிசேனா உத்தரவு

No comments:

Post a Comment