திருவனந்தபுரம், மார்ச் 15–
கேரள சட்டசபையில் கடந்த 13–ந்தேதி வரலாறு காணாத ரகளை நடந்தது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நிதி மந்திரியாக உள்ள மாணி மீது பார் உரிமையாளர்களிடம் ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் உள்ளதால் அவர் சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடாது என்று கூறி எதிர்க்கட்சிகள் இந்த ரகளையில் ஈடுபட் டன. இதனால் கேரள சட்டசபை போர்க்களமாக மாறியது.
எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மாணி பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார்.
சட்டசபையில் நடந்த ரகளையை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் கேரளாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. பல இடங்களில் பஸ் உடைப்பு உள்பட வன்முறை சம்பவங் களும் நடைபெற்றன. சட்டசபையில் எதிர்க் கட்சிகளின் ரகளைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கருப்பு தினம் கடை பிடிக்கபோவதாக ஆளும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.
இதற்கிடையே சட்டசபையில் நடந்த ரகளை பற்றி கேரள கவர்னர் சதாசிவம், ஜனாதிபதிக்கு அறிக்கை அளிக்க உள்ளார். அரசியல் சட்டப் பிரிவு 356–ன் கீழ் ஜனாதிபதிக்கு இந்த அறிக்கை அனுப்பப்படும் என்று கவர்னர் சதாசிவம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கவர்னர் சதாசிவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
கேரள சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் மிகவும் துரதிருஷ்டவசமானது. ஜனநாயக கோவிலான சட்டசபையில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்ததே இல்லை. சட்டசபை கலவரம் தொடர்பாக ஜனாதிபதிக்கு, கவர்னர் அறிக்கை அனுப்ப வேண்டும் என்பது மரபு. அதன்படி, நானும் இதுபற்றி ஜனாதிபதிக்கு அறிக்கை அனுப்புவேன் என்றார்.

No comments:
Post a Comment