Saturday, 14 March 2015

பாகிஸ்தானுடன் மோதல்: அயர்லாந்து கேப்டன் போர்ட்டர் பீல்டு சதம்

அடிலெய்ட், மார்ச் 15–

உலகக்கோப்பையின் கடைசி லீக் ஆட்டம் ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட்டில் இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. இதில் ‘பி’ பிரிவில் உள்ள பாகிஸ்தான்– அயர்லாந்து அணிகள் மோதின வருகின்றன. பாகிஸ்தான் அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. காயம் காரணமாக யூனுஸ்கான், முகமது இர்பான் விளையாடவில்லை. அவர்களுக்கு பதிலாக ஹாரிஸ் சோகைல், ஆதில் இடம் பெற்றனர். அயர்லாந்து அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அயர்லாந்து கேப்டன் போர்ட்டர் பீல்டு ‘டாஸ்’ வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

தொடக்கமே அயர்லாந்துக்கு அதிர்ச்சியாக இருந்தது. பால்ஸ்டிரிலிங் 3 ரன்னில் ஆதில் பந்திலும், அதைத்தொடர்ந்து எட் ஜாய்ஸ் 11 ரன்னில் வகாப் ரியாஸ் பந்திலும் ஆட்டம் இழந்தனர். 12.3–வது ஓவரில் அயர்லாந்து 56 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்தது.

3-வது விக்கெட்டுக்கு போர்ட்டர் பீல்டு உடன் என் ஓ பிரையன்  ஜோடி சேர்ந்தார். இவரும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அணியின் ஸ்கோர் 86 ரன்னாக இருக்கும்போது 12 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் போர்ட்டர் பீல்டு சிறப்பாக விளையாடி 59 பந்தில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரை சதம் அடித்தார்.

4-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய பால்பிர்னி 18 ரன்னில் ஆட்டம் இழந்தார். 5-வது விக்கெட்டுக்கு வில்சன் களம் இறங்கினார். எதிர்முனையில் அரை சதம் கடந்து விளையாடிய போர்ட்டர் பீல்டு சதம் அடித்தார். இவர் 124 பந்தில் 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார்.

No comments:

Post a Comment