சென்னை, மார்ச் 23- 
சென்னையில், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகளை விளக்கும் விழிப்புணர்வு கலைப் பயணத்தை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி இன்று துவக்கி வைத்தார்.
தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாற்ற பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து, பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு உறுதியான தார்சாலைகள் அமைக்கும் திட்டம், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப் பைகள் வழங்கும் திட்டம், அனைத்து மாவட்டங்களிலும் பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்ற பயிலரங்கம், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகளை விளக்கிடும் பேரணிகள், வாகனங்கள் மூலமாக கலைக்குழுவினைரைக் கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, இன்று (23.03.2015), சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை, அரும்புகள் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு (ஃபெட்காட்)ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்த கலைப் பிரச்சார குழுவின் வாகனத்தை சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பிரச்சார வாகன கலைக்குழுவினர் இன்று ராயபுரம், புது வண்ணாரப்பேட்டை, கண்ணதாசன் நகர், பெரம்பூர், அயனாவரம், வில்லிவாக்கம், பாடி, கொரட்டூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளிலும், நாளை (24.03.2015) அண்ணா நகர், கீழ்பாக்கம், புரசைவாக்கம், எழும்பூர், நுங்கம்பாக்கம், தியாகராய நகர், கோடம்பாக்கம் வடபழனி மற்றும் போரூர் ஆகிய பகுதிகளிலும் விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மேற்கொள்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை கூடுதல் இயக்குநர் எம்.ஜெயந்தி, அரும்புகள் அமைப்பின் நிர்வாக இயக்குநர் இராஜ மதிவாணன், இயக்குநர் வி.லதா மதிவாணன், இந்திய ரெட்கிராஸ் சங்கத்தின் தமிழ்நாடு கிளை தலைவர் ஹரிஷ் எல் மேத்தா, சென்னை மாவட்ட செயலர் சத்தியநாராயணன், ஃபெட்காட் அமைப்பின் நிர்வாகிகள் டி.ஏ.பிரபாகர், எம்.செல்வராஜ், எம்.நாகராஜன், கே.ஜீவரத்தினம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment