சென்னை, மார்ச். 4–
சென்னையில் மெட்ரோ ரெயில் முதல் கட்டப் பணி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.
கோயம்பேடு–ஆலந்தூர் இடையேயான உயர்மட்ட சாலையில் முதலில் ரெயில் போக்குவரத்தை தொடங்க அனைத்து இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
10 கிலோ மீட்டர் நீளத்திற்கு தண்டவாளம், ரெயில் நிலையங்கள், சிக்னல் மற்றும் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போன்றவை உள்ளிட்ட அனைத்து எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்கல் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
கோயம்பேடு–ஆலந்தூர் மெட்ரோ ரெயில் பணிகள் முடிக்கப்பட்டாலும் ரெயில்வே பாதுகாப்பு குழுவினரின் பரிசோதனை இறுதி கட்ட ஆய்வு நடத்தி அறிக்கை கொடுத்த பிறகு தான் போக்குவரத்தை தொடங்க முடியும்.
பாதுகாப்பு ஆணையரின் ஆய்வின்போது கண்டு பிடிக்கப்படும் குறைகள், தவறுகள் போன்றவற்றை நிவர்த்தி செய்த பின்னரே போக்குவரத்தை தொடங்க அனுமதி அளிக்கப்படும்.
இதனால் பாதுகாப்பு ஆணையரின் வருகை தேதி இன்னும் முடிவாகாமல் இருந்தது.
இந்த நிலையில் இந்த மாதம் இறுதியில் பாதுகாப்பு குழுவினரின் ஆய்வு நடைபெறும் என்று மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதுகாப்பு குழு அதிகாரிகள் 20–ந்தேதி சென்னை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் 20–ந்தேதியோ அல்லது அதனை தொடர்ந்து ஓரிரு நாட்களில் பாதுகாப்பு சோதனை நடத்தப்படுவது உறுதியாகி விட்டது.
இந்த பாதுகாப்பு சோதனை ஒரு வாரம் நடைபெறும். அதனை தொடர்ந்து இரு வாரங்களில் மெட்ரோ ரெயில் இயக்குவது குறித்து ஒப்புதல் அளிக்கப்படும். இதனை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் மெட்ரோ ரெயில் தொடக்க விழா நடைபெறும்.
இதற்கிடையில் மெட்ரோ ரெயில் தொடக்க விழா குறித்து தமிழக அரசிடம் தேதி கேட்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment