Wednesday, 11 March 2015

மணிப்பூரில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 3 பேர் உடல் சிதறி பலி

இம்பால், மார்ச் 11- 

மணிப்பூர் மாநிலம் இம்பாலில் இன்று மாலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 3 பேர் உடல் சிதறி பலியாகினர். 

இம்பால் மார்க்கெட் காம்ப்ளக்சில் இன்று மாலை ஏராளமான பொதுமக்கள் பரபரப்புடன் பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென குண்டு வெடித்தது. இதனால், பலர் தூக்கி வீசப்பட்டனர். வெடிகுண்டு சத்தம் கேட்டதும் பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.  

இந்த சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். 23 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துமவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.  

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
மணிப்பூரில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 3 பேர் உடல் சிதறி பலி

No comments:

Post a Comment