Wednesday, 4 March 2015

சென்னை ரெயிலில் கடத்திய 25 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை, மார்ச்.3–
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து மதுரைக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வந்தது.
அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணிகள் இருக்கையின் கீழ் கேட்பாரற்று கிடந்த மூட்டைகளை ரெயில்வே போலீசார் பிரித்து பார்த்தனர். அதில் 25 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.
கஞ்சாவை கடத்தி வந்தவர்கள் யார் என்று தெரியவில்லை. எங்கிருந்து யாருக்கு கடத்தப்பட்டது என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கசென்னை ரெயிலில் கடத்திய 25 கிலோ கஞ்சா பறிமுதல்ள்.

No comments:

Post a Comment