சென்னை, மார்ச் 25–
சென்னையில் குற்ற செயல்களை தடுக்க போலீசாரின் இரவு ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம், இணை கமிஷனர் ஜெயக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் தேவராஜ் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், ரத்னவேல் பாண்டியன் ஆகியோர் அடங்கிய போலீசார் புழல் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அம்பத்தூர் விஜயலட்சுமி புரத்தை சேர்ந்த சாமிநாதன் என்பவர் சிக்கினார். மோட்டார் சைக்கிளில் வந்த அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதை பொருட்களான ஹெராயின், பிரவுன்சுகர், கேட்டமின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. 3 கிலோ எடையுள்ள இவற்றின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.
பிடிபட்ட சாமிநாதன், என்ஜினீயரிங் பட்டதாரி அவரது பெற்றோர் இருவரும் அரசு ஊழியர்கள். குறுகிய காலத்தில் பணக்காரராக பில்லா–2 சினிமா படத்தை பார்த்து போதை பொருள் கடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு அந்தமானை சேர்ந்த தக்காளி ராஜா என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து வேப்பம்பட்டில் தங்கி இருந்த கூட்டாளி தக்காளி ராஜாவை போலீசார் கைது செய்தனர். அவர்களுடன் தொடர்புடைய மேலும் பலரை தேடி வருகிறார்கள்.
No comments:
Post a Comment