Wednesday, 25 March 2015

தாலி அறுக்கும் போராட்டம் அறிவிப்பு: கி.வீரமணி மீது போலீசில் புகார்

சென்னை, மார்ச். 25–
இந்து மக்கள் கட்சி (அர்ஜூன் சம்பத் பிரிவு) மாநில பொதுச் செயலாளர் ராம.ரவிக்குமார் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:–
நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இந்து மதத்துக்கு எதிராக பேசி இந்துகளின் மத உணர்வை புண்படுத்தி உள்ளார்.
இந்து பெண்கள் புனிதமாக மதிக்கும் மங்களகரமான தாலியை கொச்சைபடுத்தும் விதத்தில் பெண்களுக்கு தாலி தேவையில்லை என்று பேசி உள்ளார்.
தாலியை அவமதிக்கும் வகையில் ஏப்ரல் 14–ந்தேதி அன்று பெரியார் திடலில் தாலி அறுப்பு போராட்டம் நடைபெறும் என்றும் கூறி உள்ளார்.
இந்துக்கள் தாயைவிட உயர்வாக மதிக்கும் பசு மாட்டின் கறியை சமைத்து சாப்பிடும் போராட்டம் நடைபெறும் என்றும் கூறி இருக்கிறார்.
இது தேவையில்லாதது. இந்த போராட்டங்கள் வீண் பதட்டத்தை ஏற்படுத்தும். எனவே வீரமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளதுதாலி அறுக்கும் போராட்டம் அறிவிப்பு: கி.வீரமணி மீது போலீசில் புகார்

No comments:

Post a Comment