Wednesday, 25 March 2015

நேரு ஸ்டேடியத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய விளையாட்டு வளாகம்

சென்னை, மார்ச் 25-நேரு ஸ்டேடியத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய விளையாட்டு வளாகம்
முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முகாம்களுக்கு வெளியில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கும் இந்த அரசு விரிவுபடுத்தியுள்ளது. 2015–2016 ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தில் இலங்கைத் தமிழர் நலனுக்காக 108.46 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் அரசு அலுவலர்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 504.81 கோடி ரூபாய் அளவில் 1,26,462 அலுவலர்கள் பயன்பெற்றுள்ளனர். நமது மாநிலத்தில் 7 லட்சம் ஓய்வூதியர்களும், குடும்ப ஓய்வூதியர்களும் உள்ளனர்.
அரசு அலுவலகர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் போன்றே, ஓய்வூதியர்களுக்கான சிறப்புக் காப்பீட்டுத் திட்டத்தையும் இந்த அரசு தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இதுவரை 87.23 கோடி ரூபாய் செலவில் 29,978 ஓய்வூதியர்கள் மருத்துவச் சிகிச்சை பெற்றுள்ளனர். 2015–2016 ஆம் அண்டு வரவு–செலவுத் திட்டத்தில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்களுக்காக 18,668 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
மாற்றுத் திறனாளிகளுக்குப் பயனளிக்கக்கூடிய வகையில் ஒருங்கிணைந்த மறுவாழ்வுத் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. கடும் ஊனமுற்றோர், மன வளர்ச்சி குன்றியோர் மற்றும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு வழங்கப்படும் மாதாந்திரப் பராமரிப்பு உதவித் தொகையை 1,500 ரூபாயாக இந்த அரசு உயர்த்தியுள்ளது.
சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் 12 கோடி ரூபாய் செலவில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த ரூ.364 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment