2010–2011–ம் ஆண்டில் 3,184.47 கோடி ரூபாயாக இருந்த காவல்துறைக்கான ஒதுக்கீடு தொடர்ந்து உயர்த்தப்பட்டு, முன் எப்போதும் இல்லாத அளவில் 2015–2016–ம் ஆண்டு வரவு–செலவுத்திட்டத்தில் 5,568.81 கோடி ரூபாய் அளவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காவல் துறையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட இந்த அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் காவல் துறைக்கான கட்டடங்களை கட்டுவதற்காக 2,216.99 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2015–2016–ம் ஆண்டு வரவு–செலவு திட்டத்தில் கட்டடங்கள் கட்டுவதற்காக 538.49 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையை நவீனப்படுத்துவதற்காக, கடந்த நான்கு ஆண்டுகளில் 73.23 கோடி ரூபாய் செலவில் 16 புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களை தொடங்கவும், 66 புதிய தீயணைப்பு வண்டிகள் வாங்கவும், மூன்று புதிய வான் தூக்கிகள் வாங்கவும் இந்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் விளைவாக இத்துறை 541 உயிர்களை காப்பாற்றவும், 1,613.49 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை சேதமடைவதில் இருந்து தடுத்து பாதுகாக்கவும் முடிந்தது.
துரிதமாக செயலாற்றும் துணிவுமிக்க நவீன படையாக இத்துறை மாற்றம் அடைந்துள்ளதை, அண்மையில் மவுலிவாக்கத்தில் நிகழ்ந்த கட்டட விபத்து மீட்பு பணிகள் நிரூபித்துள்ளன. 2015–2016–ம் ஆண்டு வரவு–செலவுத்திட்டத்தில் இத்துறைக்கு 198.96 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள சிறைக்கட்டமைப்பும் பெருமளவு மேம்படுத்தப்பட்டுள்ளது. 2015–2016–ம் ஆண்டு வரவு–செலவு திட்டத்தில் இத்துறைக்கு 227.03 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீதித்துறையை நவீன மயமாக்கும் பணியை இந்த அரசு தொடர்ந்து மேற்கொள்ளும். 2015–2016–ம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தில் நீதி நிர்வாகத்துக்கு மொத்தமாக 809.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment