சண்டிகார்,
அரியானாவில் கண் அறுவை சிகிச்சை செய்துக் கொண்ட 14 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரியானா மாநிலம் பானிபட் பகுதியில் தனியார் மருத்துவமனையில் சார்பில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாம் கடந்த 11ம் தேதி நடைபெற்றது. முகாமில் கண்பரிசோதனை செய்துக் கொண்ட சிலர், கேட்ராக்ட் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டனர். முகாம் நடந்த இரண்டு நாட்களில் தங்களது கண்கள் மிகவும் வலிக்கிறது என்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்டவர்கள் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றனர். அவர்கள் போஸ்ட் கிராஜுவேட் இன்ஸ்டியூட் ஆப் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அறுவை சிகிச்சையை அடுத்து சுமார் 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 5 பேர் பெண்கள் ஆவர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாநில சுகாதாரத் துறை மந்திரி அனில் விஜ், நேற்று சந்தித்து பேசினார். சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்டு அறிந்தார். தொடர்ந்து மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment