சென்னை, மார்ச். 25–
சென்னை மாநகராட்சியில் புரசைவாக்கம் 103 மற்றும் 104–ம் வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் தொழில் உரிமம் புதுப்பிக்கும் சிறப்பு முகாம் இன்று நடந்தது.
புரசைவாக்கம் வியாபாரிகள் சங்க கட்டிடத்தில் நடந்த முகாமுக்கு மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் பானுசந்திரன், ஆய்வாளர் ஆறுமுகம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் தொழில் உரிமங்களை புதுப்பிக்க ஒரே நேரத்தில் 500 வியாபாரிகள் அங்கு திரண்டனர்.
அவர்களுக்கு 2015–2016–ம் ஆண்டுக்கான தொழில் உரிமம் புதுப்பித்து சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், புரசைவாக்கம் வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.நாகபூஷணம், செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் ஹரிகிருஷ்ணன், மாநில இணை செயலாளர் பி.எல்.செல்வம், கே.மணி, கோபிநாதன், பன்னீர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்
. முகாம் இன்று மாலை வரை நடக்கிறது
No comments:
Post a Comment