Monday, 23 March 2015

பொதுமக்கள் தாகத்தை தணிக்க குடிநீர்– நீர் மோர் பந்தல் அமையுங்கள்: ஜெயலலிதா வேண்டுகோள்

சென்னை, மார்ச் 23–
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்–அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
மக்கள் நலப்பணிகளை தன்னலம் கருதாது ஆர்வத்துடனும், அக்கறையுடனும் செயல்படுத்துவதில் `அ.தி.மு.க.‘ எப்பொழுதும் முன்னணியில் இருந்து வருவதை மக்கள் நன்கு அறிவர்.
அந்த வகையில், என் உயிரினும் மேலான என தருமைக்கழக உடன்பிறப்புகள் தற்போது ஆற்ற வேண்டிய பணி ஒன்றினை உங்களுக்கு நான் நினைவூட்டுகிறேன்.
அது தான் ஆண்டுதோறும் கோடைக்காலங்களில் குடிநீர் பந்தல்கள், நீர் மோர் பந்தல்கள் அமைக்கும் பணி.
வெயிலின் தாக்கம் இப்பொழுதே தொடங்கிவிட்டதால், கழக உடன்பிறப்புகள் தாங்கள் வாழும் பகுதிகளில் எவ்வித ஆடம்பரமும் இன்றி எளிமையான முறையில் ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை உடனடியாக அமைத்து மக்களின் தாகத்தைத் தணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பொதுமக்களின் தாகத்தை தணிப்பதற்காக அமைக்கும் குடிநீர் பந்தல்கள் மற்றும் நீர் மோர் பந்தல்களை காலையில் ஒரு முறையும், மதியம் ஒரு முறையும், பிற்பகல் ஒரு முறையும் நேரில் சென்று பார்வையிட்டு சுகாதாரமான முறையில் அவை செயல்படுவதற்கு ஏற்ற திட்டத்தோடு இந்த பணியினை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்பதை வலியுறுத்திக்கூற விரும்புகிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்

No comments:

Post a Comment