தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. பந்தலின் உள்ளே மண்பாணையில் தண்ணீர் வைக்கப்பட்டு இருந்தது. பொதுவாக நீர், மோர் பந்தல் அமைக்கும்போது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற வேண்டும்.
ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தினர் அனுமதி வாங்காமல் தண்ணீர் பந்தல் அமைத்து இருந்ததாகம் , இதனால் இன்று தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீர் பந்தலை அகற்றியுள்ளனர்.
தகவல் அறிந்ததும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா தலைமையில் கட்சியினர் அங்கு குவிந்தனர். மாநகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.
எங்களின் தண்ணீர் பந்தலை எப்படி அகற்றலாம்? என்று கேள்வி கேட்டனர். அதற்கு மாநகராட்சி ஊழியர்கள், அனுமதி பெற்று தான் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என்று கூறி அகற்றினர். தவெகவின் அமைத்திருந்த தண்ணீர் பந்தல் அருகே திமுக சார்பிலும் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. அதனை ஏன் அகற்றவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி மாநகராட்சி ஊழியரை இழுத்து சென்று திமுகவினர் நீர், மோர் பந்தல் அருகே நிற்க வைத்து எடுயா இப்போது.. அகற்றுயா இப்போது என்று அதட்டியுள்ளனர்.
பின்னர் மாநகராட்சி ஊழியர்களுக்கு எதிராக தவெகழகத்தினர் அண்ணா பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் வந்து அவர்களை சமாதானம் செய்தனர். அப்போது போலீசாருக்கும், தவெகழகத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக தவெககழகத்தினர் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment