சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் (Chennai Metropolitan Transport Corporation - MTC) 7 வழித்தட பேருந்துகளின் எண்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் 01.05.2025 முதல் அமலுக்கு வருகின்றன. குறிப்பாக, மாதவரம் தாம்பரம் மற்றும் கவியரசு கண்ணதாசன் நகர் தாம்பரம் வழித்தடங்களில் பேருந்து எண்கள் மாற்றப்பட்டுள்ளன.
மாநகரப் போக்குவரத்துக் கழக பஸ்களின் தட எண்களை பகுதி வாரியாக சீரமைத்து, அதில் 7 வழித்தட எண்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து சென்னை மநரக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

புதிய வழித்தட எண்கள்:-
மாதவரம் டூ தாம்பரம் (பழைய எண் - 121F) - மாற்றப்பட்ட எண் - 170A . கவியரசு கண்ணதாசன் நகர் டூ தாம்பரம் - (121 H) - புதிய எண் - 170T
அய்யப்பன் தாங்கல் - பிராட்வே (11GET) - புதிய எண் - 11M
பிராட் வே டூ கிளாம்பக்கம் (18Ax) - புதிய எண் - 18A
திருவாண்மியூர் டூ கிளாம்பாக்கம் (91K) - புதிய எண் 91
பூந்தமல்லி டூ கூடுவாஞ்சேரி (66x) புதிய எண் 66 px *
கவியரசு கண்ணதாசன் நகர் டூ கிளாம்பக்கம் (121 H ET) - புதிய எண் - 170 TX
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment