2 நாட்களுக்கு முன்பு, முதலமைச்சர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், "குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும், அதற்கான பொருளும் அடங்கிய இணையதளம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும்" என்று பதிவிட்டிருந்தார் இது அனைவரிடையே வரவேற்பும் பெற்றது .
அதில், தமிழ் வளர்ச்சி துறை செயலர் செல்வராஜ், ''வணிக நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கும் போதும், புதுப்பிக்கும் போதும், தமிழில் பெயர்ப்பலகை உள்ளதா என்பதை உறுதி செய்து வழங்கினால், பிரச்னைகளை களையலாம்,'' என்றார்.
அதற்கு, தொழிலாளர் நலத்துறை செயலர் குமார் ஜெயந்த், ''தமிழில் பெயர்ப்பலகை வைக்காத நிறுவனங்களுக்கு, 50 ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டத்தை திருத்த அரசாணை வெளியிடப்பட்டது. 2,000 ரூபாயாக அபராத தொகையை உயர்த்தும் வகையில், அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது,'' என்றார்.
இதையடுத்து பேசிய, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதன், ''அடுத்த மாதம், 21 முதல் 27ம் தேதி வரை, தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரமாக கடைப்பிடித்து, விழிப்புணர்வு கூட்டங்கள், பேரணிகள் நடத்தி, வணிகர்களுக்கு, உயர்த்தப்பட்ட அபராதம் குறித்து தெரிவிக்க வேண்டும்,'' என, உத்தரவிட்டார்.
தொழிலாளர் நல ஆணையர் அதுல் ஆனந்த், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அவ்வை அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment