அமலாக்கத்துறை விசாரணையில், சட்டவிரோத பணப் பரிவார்த்தையில் விதிமீறல் ஏற்பட்டதற்கு அபராதமாக 908 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2020-ம் ஆண்டு ஜெகத்துக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. சோதனையின் முடிவில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரம் தகவல் தெரிவித்தன.
அதேபோல ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 89.19 கோடி ரூபாய் மதிப்புடைய அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பை எதிர்த்து நீதிமன்றத்துக்குச் சென்றது ஜெகத்ரட்சகன் தரப்பு. அதனை தொடர்ந்து சொத்து முடக்கத்தை ரத்து செய்தது நீதிமன்றம்.
ரத்து செய்ததை எதிர்த்து நீதிமன்றம் சென்றது அமலாக்கத்துறை தரப்பு. ஜெகத்ரட்சகன் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்ட விதிகளை மீறி பல்வேறு குற்றங்களைச் செய்திருப்பதாக நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. அதோடு அவர் சிங்கப்பூர், இலங்கை என வெளிநாடுகளில் 51 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்திருக்கிறார் என்று அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் வாதாடியது. இந்த விவகாரம் தொடர்பாகவே ஜெகத்ரட்சகனின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது. இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சொத்துக்களைப் பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
அதே சமயத்தில், அமலாக்கத்துறை விசாரணையில், சட்டவிரோத பணப் பரிவார்த்தையில் விதிமீறல் ஏற்பட்டதற்கு அபராதமாக 908 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, முடக்கப்பட்ட 89.19 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்து பறிமுதல் செய்யப்படுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment