சென்னை பல்லாவரத்தை அடுத்த திரிசூலம் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கென பொது கிணறு ஒன்று உள்ளது. அந்த பகுதி பொதுமக்கள் இந்த கிணற்று நீரைத்தான் தினமும் பருகுகிறார்கள். இந்நிலையில் திரிசூலம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.12 லட்சத்தில் பொது கிணற்றின் கான்கிரீட் சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருந்தது. இந்த சுவர் கட்டிய வெறும் 3 ஆண்டுகளில் அடியோடு இடிந்து விழுந்தது. தரமற்ற முறையில் கட்டப்பட்டதாலேயே இடிந்து விழுந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
.
சென்னை விமான நிலையம் எதிரே உள்ள திரிசூலம் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கென உள்ள பொது கிணறு இருக்கிறது . அந்த பகுதி பொதுமக்கள் நெடுங்காலமாக இந்த கிணற்று நீரைத்தான் தினமும் தங்களது அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் திரிசூலம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 2022-ம் ஆண்டு சுமார் ரூ.12 லட்சத்து 25 ஆயிரத்தில் இந்த கிணற்றின் பக்கவாட்டு சுவர்கள் கான்கிரீட்டால் கட்டப்பட்டிருந்தது. பொது கிணற்றின் ஓரங்களில் கட்டப்பட்டு இருந்த கான்கிரீட் சுற்றுச்சுவர்கள் 5.5.2025அன்று திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து கிணற்றின் உள்ளே விழுந்து விட்டது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த கிணற்றை ஒட்டியுள்ள ரேஷன் கடையின் சுவரும் கிணற்றின் பக்கம் சரிந்து விழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் திரிசூலம் ஊராட்சி மன்ற நிர்வாகம் அவசர அவசரமாக அந்த கிணற்றை பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை கொட்டி மூடும் பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் அந்தப்பகுதி பொதுமக்கள் கோபம் கொண்டு பொதுக்கிணற்றை சுற்றி கட்டப்பட்ட கான்கிரீட் சுற்றுச்சுவர் கட்டி முடிந்து 3 ஆண்டுகள் கூட ஆகவில்லை. அதற்குள் கிணற்றின் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதை கண்டு கோபத்தில் உள்ளனர் .
தரமற்ற முறையில் பணி நடைபெற்றதால் தான் கிணறு இடிந்து விழுந்துள்ளது. இதை சீரமைக்காமல், பல ஆண்டாக பயன்படுத்தி வந்த கிணற்றை, ஊராட்சி நிர்வாகம் மண்ணை கொட்டி மூடியுள்ளது. இவ்வாறு செய்தால் பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக என்ன செய்வார்கள். எனவே, முறையாக தூர்வாரி, தரமான பக்கவாட்டு சுவர் கட்டி, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கிணற்றை கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.
No comments:
Post a Comment