Tuesday, 6 May 2025

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் மாரடைப்பால் மரணம்


சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். நீதிபதி சத்திய நாராயணா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறாரக்ள். தமிழ் நாடு  சுகாதாரத்துறை அமைச்சர் அஞ்சலி செலுத்தினார் .

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 56. நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன்  காரணமாக அவர் உயிரிழந்து இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சையை சேர்ந்த சத்திய நாராயண பிரசாத், 1997 ஆம் ஆண்டில் இருந்து 24 வருடங்கள் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பாக, பிஎஸ் என்.எல், சென்னை துறைமுகம் அறக்கட்டளை, இந்தியன் வங்கி, தெற்கு ரயில்வே உள்ளிட்ட அரசு நிறுவனங்களின் ஆலோசகராகவும் பணியாற்றி உள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2021 ஆம் ஆண்டு சத்திய நாராயணா பதவி உயர்வு பெற்றார். பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக அவர் நியமனம் செய்யப்பட்டார். பல்வேறு வழக்குகளை திறம்பட கையாண்டு தீர்ப்பு வழங்கிய நீதிபதி சத்திய நாராயணா நீதிபதிகளின் அனுபவர்கள் வரிசையில் 42-வது இடத்தில் இருந்தார்.



No comments:

Post a Comment