தமிழக
முதல்வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில், சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் கட்சி வளர்ச்சி, தி மு க வின் ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்தும் , 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக தகவல்.
மேலும் கூட்டத்தில் தேர்தல் பணிகள் தொடர்பாக அறிவுறுத்தல்களை வெளியிடுவதுடன், மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையும் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment