குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நிதிபதி உத்தரவிட்டார்.பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்த கோவை மகளிர் நீதிமன்றம், அவர்கள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அண்ணா அடிக்காதீங்க என்ற இளம்பெண்ணின் அலறல் சத்தம் அடங்கிய வீடியோ தமிழ்நாட்டையே நடுங்க செய்திருந்தது. பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்த நிலையில், கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இன்று இந்த வழக்கின் குற்றவாளிகள் முன்னதாக சேலம் சிறையில் இருந்து குற்றவாளிகள் 9 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றம் அழைத்து வரப்பட்டனர். மேலும் நீதிமன்றம் வளாகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நாட்டையே உலுக்கும் வகையில் அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அதாவது, பல குடும்ப பெண்கள் ,கல்லூரி மாணவிகள் ,சிறுமிகள் என பலவிதங்களில் இளம்பெண்களைக் குறி வைத்து பெண்ககளை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ. 85 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றம்உத்தரவு
வழக்கின் விவரம் :
2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பொள்ளாச்சி பாலியல் வழக்கு.
கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இளம் பெண்களை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அதனை காணொளி ஆக பதிவு செய்து பாதிக்கப்பட்டவர்களை ஒரு கும்பல் மிரட்டி வந்துள்ளது.
இவர்களால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், தனது சகோதரரிடம் அது பற்றி கூறவே, தங்கையை பாலியல் சீண்டல் செய்த இளைஞர்களை சுற்றி வளைத்த அவரது சகோதரர் அவர்களை விசாரித்திருக்கிறார்.அப்போது அந்த மாணவி மற்றும் அவரது சகோதரரும் தாக்கப்பட்டார், அந்த இளைஞர்கள் வைத்திருந்த செல்போன்களில் ஏராளமான இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துன்புறுத்தப்படும் காணொளிகள் இருந்துள்ளன. இதனையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண் மற்றும் அவரது சகோதரரும் பிப்ரவரி 12- 2019பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்,அந்தப் புகாரி அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்ட நாள் 2019 பிப்ரவரி 24 அதன் அடிப்படையில் சபரிராஜன் என்கிற ரிஷ்வந்த், வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அந்த நேரத்தில் திருநாவுக்கரசு என்பவர் தலைமறைவாகி இருந்த நிலையில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். பின்னர் தனக்கும் இந்த வழக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஒரு நாள் திருநாவுக்கரசு வீடியோ வெளியிட்டார். 2019 மார்ச் 5 அன்று அவரும் கைது செய்யப்பட்டார்.
திருநாவுக்கரசு ஐபோனில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் பதியப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதுவே வழக்கின் முதல் முக்கியமான ஆதாரமாக இருந்தது. வழக்கு பதியப்பட்ட ஒரே மாதத்திற்குள் 2019 மார்ச் மாதத்தில் சிபிசிஐடிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அஇஅதிமுக இந்த வழக்கை CBI க்கு மாற்றியது. இந்த வழக்கு அப்போது மிகப் பெரிய பேசும் பொருளாக இருந்தது எதிர்க்கட்சி தி மு க ஆளுங்கட்சி மீது இதனை வைத்தே குற்றம் சாட்டி கொண்டே இருந்தது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபரான சபரி ராஜன் வீட்டில் கைப்பற்றப்பட்ட லேப்டாப் இந்த வழக்கின் மிக முக்கியமான மற்றொரு ஆதாரமாக பிடிபட்டது. 2019 ஏப்ரல் 25 அன்று இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
செல்போன்கள் லேப்டாப் போன்றவற்றிலிருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் மின்னணு ஆதார் ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட 20 பெண்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் முதல் கட்டமாக கைதான சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன்,அருண்குமார் ஆகியோருக்கு எதிராக 2019 மே 24 அன்று முதல் கட்ட குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு சிபிஐ வசம் வந்த பின் விசாரணையில் இந்த வழக்கில் அருளானந்தம், ஹரன்பால் மற்றும் பாபு ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர் இவர்கள் மூவருமே அதிமுகவை சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டுடன் அரசியல் அளவில் பேசும் பொருளானது. இந்த மூன்று குற்றவாளிகள் மீதும் 22 ஆம் தேதி பிப்ரவரி 2021 கூடுதல் குற்றப்பத்திரிக்கை கோவை மகிளா நீதிமன்றத்தில் இரண்டாவதாக தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர், அவர்களின் 48 பேர் மட்டுமே சிபிஐ அதிகாரிகளால் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர் படுத்தப்பட்டனர்.
பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவின்போது காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரகாஷ் முதல் விசாரணை அதிகாரியாக இருந்தார். சி பி சி ஐ டி இடம் மாற்றப்பட்ட பின்பு எஸ் பி நிஷா பார்த்திபன் விசாரணை நடத்தினார். அதன் பின் சிபிஐ அதிகாரிகள் விஜய் வைஷ்ணவி ஆய்வாளர் பச்சையம்மாள் ஆகியோர் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த வழக்கில் எலக்ட்ரானிக் பொருட்களை முக்கிய ஆதாரங்களாக சேர்க்கப்பட்டுள்ளன iphone-ல் எடுக்கப்பட்ட வீடியோ புகைப்படங்கள் ஆகியவற்றை வைத்து குற்றம் நடந்த தேதி நேரம் ஆகியவை எடுக்கப்பட்டுள்ளன. whatsapp குழுவை தொடங்கி அதில் ஆபாச வீடியோக்கள் பகிர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் புகார் கொடுக்க அச்சப்பட்டுள்ளனர், இவர்களை அச்சுறுத்துவதற்காகவே சில ஆபாச வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் இவர்கள் பதிவிட்டிருந்தனர் விசாரணையின் போது அவை முழுவதுமாக நீக்கப்பட்டன,
இந்த வழக்கின் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு வழக்குப் பதியப்பட்ட நாளிலிருந்து குற்றம் சாட்டப்பட்ட யாருக்கும் பிணை வழங்கப்படவில்லை, பாதிக்கப்பட்ட 8 பேர்களில் 7 பேர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி சாட்சியம் கூறினார்.
இவர்களிடம் நீதிமன்ற அறையில் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது குற்ற பத்திரிக்கையில் குற்றவாளிகள் மீது 76 விதமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன . அரசு தரப்பில் 25 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 12 ஆவணங்கள் குறித்து தரப்பட்டன, இவற்றைத் தவிர்த்து நீதிமன்றம் தானாக 11 ஆவணங்களை எடுத்துக் கொண்டுள்ளது, வழக்கு விசாரணையில் கைப்பற்றப்பட்ட செல்போன்கள் லேப்டாப் ஹார்டிஸ்க் உள்ளிட்ட முக்கியமான 30 பொருட்கள் ஆதாரமாக ஆவணமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இறுதிவரை பிறர் சாட்சியாக மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது முதல் குற்ற பத்திரிக்கை துவங்கி இன்று வரை மொத்தம் 1500 பக்கங்களில் குற்ற பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது சாட்சிகளிடம் 236 கேள்விகள் கேட்கப்பட்டு அவை பதிவு செய்யப்பட்டுள்ளன இந்த வழக்கை கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தொடர்ந்து ஐந்தாண்டுகளாக விசாரித்து வந்தார் இடையில் அவருக்கு பணியிடை மாற்றம் வழங்கப்பட்டு மீண்டும் உயர்நீதிமன்ற உத்தரவால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்புகள் வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பே பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டிய ஒன்பது குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூபாய் 85 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தண்டனை விவரங்கள்
- முதல் குற்றவாளி சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனைகள்
- இரண்டாம் குற்றவாளி திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனைகள்
- மூன்றாம் குற்றவாளி சதீஷுக்கு 3 ஆயுள் தண்டனைகள்
- நான்காம் குற்றவாளி வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனைகள்
- ஐந்தாம் குற்றவாளி மணி எனும் மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனைகள்
- ஆறாம் குற்றவாளி பாபுவுக்கு ஒரு ஆயுள் தண்டனை
- ஏழாம் குற்றவாளி ஹெரன்பாலுக்கு 3 ஆயுள் தண்டனைகள்
- எட்டாம் குற்றவாளி அருளானந்தத்துக்கு ஒரு ஆயுள் தண்டனை
- ஒன்பதாம் குற்றவாளி அருண்குமாருக்கு ஒரு ஆயுள் தண்டனை
No comments:
Post a Comment