இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிவரும் நிலையில், சென்னை சேப்பாக்கத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல் போட்டி நடந்தால் தாக்குதல் நடத்தப்படும் என "தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனுக்கு (TNCA)" மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
Pakistanjkweb@gmail.com என்ற முகவரியிலிருந்து .
அந்த மெயிலில் "we do bomb blast in stadium for operation sindoor, There will be blood bath" என குறிப்பிட்டு பாகிஸ்தான் பெயர் கொண்ட மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் அதிகாரிகள் போலீசாருக்கு அளித்த புகாரின் பேரில் திருவல்லிக்கேணி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மிரட்டல் மெயிலை கைப்பற்றியுள்ளனர். மேலும், சேப்பாக்கம் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்ற விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
போர் காரணமாக இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வாரத்திற்கு அவசரநிலை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிவரும் நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment