சென்னை கும்பகோணத்தில் உள்ள 44 குளங்கள், 11 கால்வாய்களி ஆக்கிரமிப்பு நடைபெற்றுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த 2018ம் ஆண்டு கும்பகோணம் மாநகராட்சி, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், ஐகோர்ட்டு உத்தரவு மீது எந்த நடவடிக்கையும்எடுக்கவில்லை என வழக்கறிஞர் ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட்டு கும்பகோணத்தில் கோவில் குளங்கள், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, 4 மாதங்கள் கெடு விதித்தது. ஆக்கிரமிப்புகளை 4 மாதங்களுக்குள் அகற்ற தவறினால் கும்பகோணம் மாநகராட்சிக்கும், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்துக்கும் தலா ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்என்று எச்சரிக்கை விடுத்தது.
இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரம் குறித்து ஆய்வு செய்த ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி உயர் நீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில், "கும்பகோணத்தில் உள்ள 44 குளங்களில், ஏழு குளங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. மூன்று குளங்களில் மரங்கள் உள்ளன, நான்கு குளங்கள் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 26 குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சியோ, மாவட்ட நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,"எனக் கூறப்பட்டிருந்தது.
ஓய்வு பெற்ற நீதிபதியின் அறிக்கையைப் பதிவு செய்து கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள், அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
மேலும், "கும்பகோணத்தில் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை நான்கு மாதங்களுக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய கெடுவுக்குள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாவிட்டால் கும்பகோணம் மாநகராட்சி, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றுக்கு தலா ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும். காலக்கெடுவுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்க கோரி, மாவட்ட நீதிபதி விண்ணப்பிக்கலாம். நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் குளங்கள், வாய்க்கால்களில் எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது. பொற்றாமரை குளத்தின் வரத்துக் கால்வாய்களை கண்டறிந்து, அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மாவட்ட நிர்வாகத்துக்கும், கும்பகோணம் மாநகராட்சிக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
No comments:
Post a Comment