Saturday, 10 May 2025

மதுரை வந்தது கள்ளழகர் தங்கக்குதிரை வாகனம்; மே 12 வைகையில் இறங்குகிறார் அழகர்.

 மே 12 வைகையில் இறங்குகிறார் கள்ளழகர்; அழகர்கோவில் சித்திரைத்திருவிழா நேற்று ஆரம்பமானது. நாளை (மே 10) மாலை 6:00 மணி முதல் 6:15 மணிக்குள் கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார். மே 11ல் மூன்று மாவடியில் அவரை பக்தர்கள் வரவேற்கும் எதிர்சேவை நடக்கிறது. மே 12ல் அதிகாலை 5:45 மணி முதல் 6:05 மணிக்குள் வைகையாற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் தங்கக்குதிரை வாகனத்தில் வைகையில் எழுந்தருளுகிறார். மதியம் ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி உற்ஸவம் நடக்கிறது. 

இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் எழுந்தருளுகிறார்.மே 13 காலை சேஷ வாகனத்தில் புறப்பட்டு வைகையாறு தேனுார் மண்டபம் வருகிறார். மதியம் கருடவாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடக்கிறது. மே 14 மதியம் அனந்தராயர் பல்லக்கில் சேதுபதி மண்டபத்திற்கு புறப்படுகிறார். இரவு பூப்பல்லக்கில் அழகர்கோவிலுக்கு புறப்படுகிறார். மே 16 காலை 10:00 மணி முதல் 10:25 மணிக்குள் இருப்பிடம் சேருகிறார்.



No comments:

Post a Comment