
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவராகவும் சிதம்பரம் லோக்சபா தொகுதியின் எம்பியாக இருப்பவர் தொல் திருமாவளவன். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வரும் 6ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், விழுப்புரம் தொகுதி எம்பியுமான ரவிக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ எஸ்எஸ் பாலாஜி, செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு உள்பட பல நிர்வாகிகள் இன்று மேடை அமைக்கும் பணியை பார்வையிட சென்றுள்ளனர் . அப்போது மேடையின் மீது ஏற தற்காலிகமாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் வழியாக மேடை மீது ஏற சென்றுள்ளனர் . முதலில் ரவிக்குமார் எம்பி உள்பட நிர்வாகிகள் சிலர் மேடைக்கு சென்றனர். அதன்பிறகு எம்எல்ஏக்கள் எஸ்எஸ் பாலாஜி, பனையூர் பாபு உள்ளிட்டோரூம் மேடை ஏற சென்றுள்ளனர்.
அப்போது மேடைக்கு செல்ல அமைக்கப்பட்டு இருந்த படிக்கட்டுகள் திடீரென உடைந்தது. இதனால் எம்எல்ஏக்கள் எஸ்எஸ் பாலாஜி, பனையூர் பாபு, உட்பட கட்சி நிர்வாகிகள் கீழே விழுந்தனர். 2 எம்எல்ஏக்களும் லேசாக காயமடைந்தனர்.
No comments:
Post a Comment