1. அதம்பூர்,2. அம்பாலா,3. அமிர்தசரஸ்,4. அவந்திபூர்,5. பதின்டா,6. புஜ்,
7. பிகானிர், 8. சண்டிகர்,9. ஹல்வாரா, 9. ஹல்வாரா,11. ஜெய்சால்மர்
12. ஜம்மு,13. ஜாம் நகர்,14. ஜோத்பூர்15. காண்ட்லா,16. காங்ரா,17. கேஷூட்
18. கிஷாங்கர்,19. குலு மணாலி,20. லே,21. லூதியானா,22. முந்த்ரா,23. நாலியா
24. பதான்கோட்,25. பட்டியாலா,26. போர்பந்தர்,27. ராஜ்கோட்,28. சார்சவா
29. ஷிம்லா,30. ஸ்ரீநகர்,31. தோய்ஷ், 32. உத்தர்லாய்
விவரம்
பஹல்காமில் இந்திய சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்தது.
இதன் காரணமாக இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதில் 50க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இறந்ததாக கூறப்பட்டது.
இதனையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லை மாநிலங்களான ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் மீது ட்ரோன் மற்றும் ஏவுகனைகளை கொண்டு தாக்கியது. இதனை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக முறியடித்தது.
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக, எல்லையோர மாநிலத்தில் உள்ள 32 விமான நிலையங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மே 9ம் தேதி முதல் வரும் மே 15ம் தேதி காலை 5.29 மணி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.
தற்போது போர் பதற்றம் தணிந்துள்ள நிலையில், மேலே குறிப்பிட்டுள்ள மூடப்பட்ட 32 விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
x
No comments:
Post a Comment