Tuesday, 6 May 2025

ரேபரெலி தொகுதி எம்பி ராகுல் காந்தி "இரட்டைக் குடியுரிமை வழக்கு" -தள்ளுபடி

 காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி ரேபரெலி தொகுதியில் எம்பியாக இருக்கிறார். இவருக்கு இந்தியா மற்றும்  பிரிட்டன் நாட்டிலும்  குடியுரிமை இருப்பதாகச் சொல்லிக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக பிரமுகரும், வழக்கறிஞருமான விக்னேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை இல்லை என்பதால் , அவர் பிரிட்டன் குடியுரிமை வைத்திருந்தால் எம்பியாக இருக்க முடியாது. ராகுல் காந்தி பிரிட்டன் குடிமகன் என்பதால் அவரது இந்தியக் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு விசாரித்து வந்தது.

  மே 5 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதிகள் ராஜீவ் சிங் மற்றும் ஏ.ஆர். மசூதி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது , பின்னர்  இந்த பொது நல வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அதைத் தள்ளுபடி செய்வதாக அலகாபாத் ஐகோர்ட் அறிவித்துள்ளது.

அதேநேரம் மத்திய அரசு இந்த விஷயத்தில் இறுதி முடிவை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரு நாட்டு அரசு தொடர்பான விவகாரம் என்பதால், இந்த விவகாரம் மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் உள்ளது என்பதையும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மேலும் இந்த விசாரணையை முடித்து, ஒரு முடிவு எட்டப்பட்டதும் மனுதாரரான எஸ். விக்னேஷ் ஷிஷிருக்கு அது குறித்துத் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். பொது நல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள போதிலும், கூடுதல் சட்ட உதவிக்காக மனுதாரர் தேவையென்றால் மீண்டும் நீதிமன்றத்தை நாடும் சுதந்திரத்தையும் வழங்கியுள்ளது.

இந்த விவகாரத்தில் விசாரணையை எப்போது முடிக்க முடியும் என்பதை மத்திய அரசால் துல்லியமாகச் சொல்லவில்லை என்பதைக் குறிப்பிட்ட நீதிபதிகள், தெளிவான காலக்கெடு இல்லாததால் வழக்கை நிலுவையில் வைத்திருப்பதில் அர்த்தமில்லை என்று தெரிவித்தனர்.

 அதைத் தொடர்ந்தே மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள் வேறு சட்ட ரீதியான தீர்வுகளை நாட மனுதாரருக்கு உரிமை இருப்பாகவும் குறிப்பிட்டனர். 

முன்னதாக நடந்த விசாரணையில் இந்த விவகாரத்தில் தெளிவான அறிக்கையைச் சமர்ப்பிக்கத் தவறியதாக  குறை கூறியுள்ளது .

குறிப்பு 

ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமையைப் பெற்றுள்ளதாக மனுதாரர் குற்றஞ்சாட்டியிருந்தார். இருப்பினும், அதைப் பிரிட்டன் அரசிடம் கேட்டு உறுதி செய்ய முடியாததால் மத்திய அரசு கூடுதல் அவகாசம் கோரியிருந்தது.

தெளிவான காலக்கெடு இல்லாததால் வழக்கை நிலுவையில் வைத்திருப்பதில் அர்த்தமில்லை என்று கூறி நீதிபதிகள் வழக்கை  தள்ளுபடி செய்துள்ளனர் .




No comments:

Post a Comment