தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய பிறகு முதல் முறையாக இன்று விஜய் செய்தியாளர்களை சந்தித்தார்.
மதுரை செல்ல இருந்த விஜய், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை ஏர்போட்டில் என் தோழர்கள், தோழிகள் என எல்லாரும் என்னை பார்ப்பதற்காக காத்திருக்கிறார்கள். அவங்க எல்லாருக்கும் முதலில் என்னுடைய வணக்கம். மதுரை மக்களுக்கு என் வணக்கம். உங்களுடைய அன்பு என் கோடான கோடி நன்றி. இன்னைக்கு நான் ஜனநாயகன் படத்த்தின் சூட்டிங்கிற்காக செல்கிறேன். கொடைக்கானலில் சூட் நடக்கிறது. அதற்காக நான் போறேன்.
கூடிய சீக்கிரமே உங்க மதுரை மண்ணுக்கு கட்சி சார்பாக வேற ஒரு சந்தர்ப்பத்தில் உங்க எல்லாரையும் கண்டிப்பாக மீட் பண்ணுறேன். இன்னைக்கு இன்னும் ஒரு 1 மணி நேரத்தில் மதுரையில் லேண்ட் ஆகி உங்க எல்லாரையும் பார்த்துட்டு நான் வந்து என் வேலையை பார்க்க போயிடுவேன். நீங்களும் என்னை பார்த்துவிட்டு பாதுகாப்பாக உங்க வீடுகளுக்கு செல்லுங்கள்.
யாரும் என்னை வாகனங்களில் பின் தொடர வேண்டாம். என்னுடைய வேனுக்கு பின்னாடியோ, காருக்கு பின்னாடியோ பின் தொடர வேண்டாம். பைக்கில் வேகமாக வருவது, பைக்கில் நின்றுகொண்டு வருவது, ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டி வருவது.. இந்த மாதிரியெல்லாம் வராதீங்க.. ஏனென்றால் இந்த மாதிரி காட்சிகளை எல்லாம் பாக்கும் போது மனதுக்கு ரொம்ப பதற்றமாக இருக்கிறது.
கூடிய சீக்கிரமே உங்க எல்லாரையும் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் மீட் பண்ணி கட்டாயம் பேசுகிறேன். உங்க எல்லாருக்கும் மே தின வாழ்த்துக்கள். லவ் யூ ஆல்.. நன்றி. இந்த தகவலை என்னால் மதுரை விமான நிலையத்தில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. அங்கு எப்படி சூழ்நிலை இருக்கும் என்று தெரியவில்லை. இதனால் இங்கு வைத்து இதனை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து வேறு எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் விஜய் அங்கிருந்து கிளம்பி சென்றார்.
No comments:
Post a Comment