Friday, 2 May 2025

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை பற்றி சிந்திக்க வேண்டிய உள்ளது'' - முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம்


U Sagayam IAS

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் இவர் கிரானைட் குவாரிகளில் நடந்த ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய காலத்தில் கிரானைட் குவாரி ஊழலை அம்பலப்படுத்தினார். 

கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் கிரானைட் முறைகேடு குறித்து விசாரித்த சகாயம் கிரானைட் ஊழல் மூலமாக ரூ.1 லட்சம் கோடி தமிழ்நாடு அரசுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கடந்த 2015 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

இந்த சம்பவத்துக்கு பிறகு பல துறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்ட சகாயம் தன்னுடைய பணி காலம் முடியும் முன்பே ஐஏஎஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். 

தற்போது கிரானைட் ஊழல் வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நடந்து வரும் சூழலில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சகாயத்துக்கு மதுரை நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.

ஆனால் தமிழ்நாடு அரசு தனக்கு வழங்கியிருந்த பாதுகாப்பை விலக்கிக் கொண்டதால், தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று குறிப்பிட்டு நீதிமன்றத்தில் சகாயம் ஆஜராவதை தவிர்த்துள்ளார்.

விவரம் 

கடந்த 2014 ஆம் ஆண்டு குவாரிகளில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்க சிறப்பு அதிகாரியாக சகாயத்தை நீதிமன்றம் நியமித்தது. இதையடுத்து அவர் 1990ஆம் ஆண்டு முதல் சுமார் 24 ஆண்டு காலமாக நடந்து வந்த முறைகேட்டை வெளியே கொண்டு வந்தார். அவர் தாக்கல் செய்த 600 பக்க அறிக்கையின் மூலம் ரூ 1 லட்சம் கோடி ரூபாய்க்கு குவாரிகளில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில் தான் கிரானைட் குவாரிகளில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு அவர் சாட்சியம் அளிக்க மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. 

இதற்கு அவருக்கு வந்த மிரட்டல் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக அவர் அரசு வழக்கறிஞருக்கு கடிதம் அனுப்பினார். அதில், ‛‛பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் மதுரை நீதிமன்றத்தில் ஆஜராக வாய்ப்பில்லை. எனக்கு மாநில அரசு வழங்கி வந்த பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது. என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது தவறானது, முறையற்றது. எனவே எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை நீதிபதியிடம் தெரிவிக்க வேண்டும்'' என குறிப்பிட்டு இருந்தார்.

‛தமிழகத்தில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை. நெல்லையில் ஜாகீர் உசேன் என்பவர் போராடினார். காவல்துறையில் பணியாற்றியவர், முன்னாள் முதலமைச்சர் ஒருவரிடம் பணியாற்றியவர் என்று சொல்லப்படுகிறது. என்னை கொல்லப்போகிறார்கள் என்று வீடியோ வெளியிட்ட 2 நாட்களுக்கு பிறகு கொல்லப்படுகிறார் என்று சொன்னால் நான் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சிந்திக்க வேண்டியதாக உள்ளது. இது அரசியல் அல்ல. அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனை பற்றி சிந்திக்க வேண்டிய ஒன்று. மிக மோசமான, பாதுகாப்பற்ற சூழல் இந்த சமூக செயற்பாட்டாளர்கள், போராளிகளுக்கு உள்ளது. இதை எனக்காக மட்டும் பேசவில்லை. இவர்களுக்கு நீங்கள் என்ன செய்து இருக்கிறீர்கள்? இங்கே கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு லட்சக்கணக்கில் கொடுக்க கூடிய தமிழக அரசு மண்ணை காத்த சமூக சொத்தாக, தேசத்தின் சொத்தாக இருக்க கூடிய கனிமவளத்தை பாதுகாப்பதற்காக இருந்த எளிய இஸ்லாமிய குடிமகனின் குடும்பம் நிராயுதபாணியாக இன்று இருக்கிறது. அவருக்கு 3 பிள்ளைகள். 2 பெண் பிள்ளைகள். ஒரு மகன் என்று சொல்கிறார்கள். வறுமை நிலையில் இருக்கிறார்கள். ஆனால் கொல்லப்பட்ட ஜகபர் அலிக்கு தமிழக அரசு எந்த இழப்பீடும் அளிக்காதது வருத்தத்துக்குரியது'' என்று சாடியுள்ளார்.

எனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் எனக்கான காவல் துறை பாதுகாப்பை மீண்டும் வழங்க உத்தரவிட வேண்டும். கிரானைட் முறைகேட்டை விசாரிக்காமல் இருக்க எனக்கு 200 கோடி ரூபாய் லஞ்சமாக தர தயாராக இருந்தனர்.

கிரானைட் குவாரிகள் தொடர்பாக ஹெலிகாம் படம் எடுத்தவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். எனக்கு உதவியவர்களின் உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் உள்ளது. எனக்கான காவல் துறை பாதுகாப்பை மீண்டும் வழங்கினால் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன்." என்று சகாயம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment