தமிழக அரசு சார்பில் இதழியல் மற்றும் ஊடகவியல் கல்வி நிறுவனம் தமிழக அரசு அறிவிப்பு- தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் இதழியல், ஊடகவியல் கல்வி நிறுவனம் தொடங்கப்படும்
சட்டப்பேரவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு
சென்னையில் இதழியல், ஊடகவியல் கல்வி நிறுவனம் இந்தக் கல்வியாண்டு முதல் தொ டங்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப் பேரவையில் செய்தி, விளம்பரம் மற்றும் எழுது பொருள் அச்சு துறையின் மானிய கோரிக்கைகள் மீது நடைபெற்ற விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மு.பெ.சாமி நாதன், “இனி ஒவ்வொரு ஆண்டும் கருணாநிதி பிறந்த நாள் செம் மொழி நாளாக கொண்டாடப்படும்” என்றார்.
இதழியல் துறையில் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் ஊடகக் கல்வி மேம்பாட்டிற்கு ஒரு முதன்மை யான கல்வி நிறுவனத்தை நிறுவி, அதன்மூலம் ஆர்வம் மிகுந்த இளம் திறமையாளர்களை ஊக்கு விக்கவும், இதழியல் மற்றும் ஊடக ஆய்வியலில் தரமான கல்வியை வழங்கிடும் வகையில், இதழியல் மற்றும் ஊடகவியல் கல்வி நிறுவனம் இந்த கல்வியாண்டு முதல் தொடங்கப்படும் என்று புதிய அறி விப்புகளை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பிற்கு தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் நன்றியை தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment