Thursday, 17 April 2025

வக்பு சட்டத்துக்கு இடைக்கால தடை-உச்சநீதிமன்றம் அதிரடி! ஒரு வாரத்தில்; மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

டெல்லி: மத்திய அரசின் வக்பு சட்டத்துக்கு இடைக்கால தடை-உச்சநீதிமன்றம் அதிரடி! ஒரு வாரத்தில்; மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு! 

வக்பு (திருத்த) சட்டம் (ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு) கடந்த 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் மொத்தம் 73 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில், இந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிராக உள்ளது என்றும் இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

வக்பு (திருத்த) சட்டத்துக்கு எதிரான மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்து மத அறக்கட்டளையில் முஸ்லிம்கள் உறுப்பினராக அனுமதிப்பீர்களா என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பெஞ்ச் முன்பாக இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது இன்று வரை வக்பு சட்டத்தின் மீதான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று பிற்பகல் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வக்பு சட்டத்துக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது, வக்பு சட்டத்துக்கு எதிராக 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனால் 6 ரிட் மனுக்களை மட்டுமே விசாரணை எடுத்துக் கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் வக்பு சட்டத்துக்கு எதிரான மனுக்களுக்கு மத்திய அரசு, வக்பு வாரியம் உள்ளிட்டவை ஒருவாரத்துக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டது.

 வக்பு சட்டத்துக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வக்பு சட்டத்துக்கு எதிரான வழக்குகள் மீதான விசாரணை அடுத்த மாதம்

 மே 5-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.

No comments:

Post a Comment